இதுதான் அக்னிவீரர்களில் அவல நிலை.. ட்வீட் போட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் - பதிலடி கொடுத்த அகிலேஷ் மிஸ்ரா!

By Ansgar R  |  First Published Oct 22, 2023, 11:30 PM IST

அக்னிவீரரான அக்ஷய் லக்ஷ்மன் சியாச்சினில் தனது கடமையில் இருந்த நேரத்தில் இறந்தள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமணனின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்து படை வீரர்களும், அந்த  அக்னிவீரரின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் அக்னிவீரர் லக்ஷ்மன் இறப்பு குறித்து ஒரு பதிவினை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். அதில்.. "சியாச்சினில் அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமணன் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு இளைஞன் நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன். 

ஆனால் அந்த வீரனுக்கு பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, அந்த மாவீரனை தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டம் தான் அக்னிவீரர் திட்டம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராகுல் காந்தி.

Latest Videos

undefined

உயிர் காக்கும் மருந்துகள்.. இந்திய மக்கள் அளித்த அத்யாவசிய பொருட்கள் - காசாவிற்கு செல்லும் விமானம்!

இந்நிலையில் அவர் கூறியது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார் ப்ளூகிராப்ட் நிறுவன தலைவர் அகிலேஷ் மிஸ்ரா அவர்கள். ராகுல் காந்தியின் பதிவிற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர், ராகுல் பொய் கூறுகின்றார் என்று கூறினார்.. மேலும் அவர் கூறியது பின்வருமாறு..

"இந்தியா என்றால் என்ன என்ற உணர்வே இல்லாத, இந்தியாவை ஒரு போதும் தன் தாய் நாடாகக் கருதாத, இந்தியாவை அவரது சொத்தாக நினைத்து கொள்ளையடித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவன்தான் இப்படி ட்வீட் செய்வார்..", "இந்தியாவில் உள்ள மிகவும் வக்கிரமான அரசியல்வாதிகள் கூட ஆயுதப்படையை பற்றி பேசுவதில்லை, அவர்களின் பேச்சுக்களில் ஒரு எல்லை இருந்தது, ஆனால் ராகுல் காந்திக்கு அது இல்லை" என்று காட்டமாக கூறினார் அவர். 

Only a man who has absolutely no sense of what India is, has never once considered India his motherland but only thought of India as his jaagir to be looted and enjoyed, will tweet like this. https://t.co/uc8BvpwXo8
Even the most crooked of politicians in India have left the…

— Akhilesh Mishra (@amishra77)

உண்மை நிலவரம் என்ன?

அக்னிவீரர்களின் விதிமுறைகள், மற்றும் போரில் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் குறித்த விவரங்கள் இதோ..

1. 48 லட்சம் பங்களிப்பு அல்லாத காப்பீடு.
2. கருணைத் தொகை ரூபாய் 44 லட்சம்.
3. அக்னிவீர் (30%) பங்களிப்புடன் சேவா நிதி, அரசாங்கத்தின் சமமான பங்களிப்புடன், அதன் மீதான வட்டி
4. உறவினர்கள் இறந்த தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவடையும் வரை (ரூ. 13 லட்சத்திற்கு மேல்) மீதமுள்ள பதவிக்காலத்திற்கான ஊதியத்தையும் பெறுவார்கள்.
5. மீதமுள்ள பதவிக்காலம் மற்றும் ஆயுதப் படைகளின் போர் விபத்து நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் பங்களிப்பு.

மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக உரிய நடவடிக்கை: டெரிக் ஓ பிரையன்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

click me!