இஸ்ரேலுடனான போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை இந்தியா இன்று அனுப்பியுள்ளது.
"அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தூங்க உதவும் பைகள், தார்பாய்கள், சுகாதாரப் பயன்பாடுகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் இடைவிடாத குண்டு மழையால் காஸாவைத் தாக்கியுள்ளது, இதில் சுமார் 1400 பேர் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, எதிர்த்தாக்குதல்கள் 4,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன என்று தெரிவித்துள்ளது.
undefined
காசாவின் உள்ளே இயக்கும் குடியிருப்பாளர்கள் எங்கு செல்வது அல்லது தங்கள் குடும்பங்களை எவ்வாறு பாதுகாப்பது என்று தெரியயாமல் தவித்து வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனியர்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும் என்று உறுதியளித்தார். "தற்போதைய மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
எகிப்தில் நடந்த ஒரு அமைதி உச்சி மாநாட்டில், ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "இந்த பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டுவர" மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேசினார்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உணவு, தண்ணீர் மற்றும் மருந்து, சனிக்கிழமையன்று எகிப்தில் இருந்து காசாவிற்குள் கொண்டுசெல்லப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இரு நாட்டுக்கும் இடையே நடக்கின்ற இந்த போரில், பொதுமக்கள் பலரும், அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.
மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக உரிய நடவடிக்கை: டெரிக் ஓ பிரையன்!