அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்வு.. மாநில அரசு அதிரடி உத்தரவு..

By Ramya sFirst Published Jun 8, 2023, 4:39 PM IST
Highlights

கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு நடத்தும் பள்ளிகளில் மொத்தம் 205 வேலை நாட்கள் இருக்கும் என்று கேரள கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் நடைபெற்ற பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன, இதை உறுதிசெய்ய குறிப்பிட்ட வாரங்களில் சனிக்கிழமைகள் வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளன. கல்வியாண்டில் வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்த போதிலும், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அது திருத்தப்பட்டு 205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகள்; களம் மாறிய தேவகவுடா; பலிக்குமா திட்டம்?

கோடை விடுமுறை தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அனைத்து சனிக்கிழமைகளும் இனி அரசுப் பள்ளிகளில் வேலை நாட்களாக இருக்கும் என்ற தகவலையும் கல்வித்துறை நிராகரித்துள்ளது. கல்வியாண்டில் மொத்தமுள்ள 52 சனிக்கிழமைகளில் 13 மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை; குமுறும் ஓய்வூதியதாரர்கள்!!

click me!