ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை; குமுறும் ஓய்வூதியதாரர்கள்!!

By Dhanalakshmi GFirst Published Jun 8, 2023, 1:39 PM IST
Highlights

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் பெறுபவர்களை கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் அதிகாரிகளின் அக்கறையின்மை ஓய்வு பெற்ற ஜூனியர் கமிஷன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.

பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டு ஜெனரல், பாதுகாப்புக் கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்) மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை ஆகியவை ஓய்வு பெற்ற வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை முடிவு செய்து கணக்கிடுகின்றன.

"2015-16 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சகத்திடம் இருந்து தரவு கோரப்பட்டது. ஆனால் அது இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சேவைகள் தலைமையகம் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கணக்கீட்டில் பின்பற்றப்பட்ட முறையை அறிய விரும்புகிறது" என்று பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து, நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரும்பாலான நிதியை அதிகாரிகள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகள்; களம் மாறிய தேவகவுடா; பலிக்குமா திட்டம்?

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் மொத்தமுள்ள ரூ.23,000 கோடி நிதியில், அதிகாரிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை எடுத்துவிட்டனர். மீதமுள்ள நிதியை சிப்பாய் மற்றும் ஹவில்தார்கள் பயன்படுத்துகின்றனர். ஜூனியர் கமிஷன் அதிகாரிகளான எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை'' என்று ஏசியாநெட் நியூசபிளுக்கு அளித்த பேட்டியில் சுபேதார் மேஜர் சுக்தேவ் சிங் (ஓய்வு) தெரிவித்தார். 

ஓய்வூதியத் தொகைகளைக் கணக்கிடும் போது, பாதுகாப்புக் கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர், பாதுகாப்புக் கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத் துறை ஆகியவை, அதே தரவரிசை மற்றும் ஒரே அளவிலான சேவையில் உள்ள ஓய்வுபெற்ற பணியாளர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச சம்பளத்தை எடுத்துக்கொள்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. 

ரெப்போ விகிதத்தில் மாற்றவில்லை; வீட்டுக் கடனுக்கான வட்டி மாறுகிறதா? என்ன சொன்னார் சக்திகாந்த தாஸ்!!

2015 ஆம் ஆண்டு முதல், இந்திய ராணுவம் மற்றும் அதன் சகோதர அமைப்பான இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிகின்றன. மேலும், வெளிப்ப்டைத்தன்மைதான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கான ஓய்வூதியத்தில் பல்வேறு நிலைகளில் முரண்பாடுகளை ராணுவம் கண்டறிந்துள்ளது.

click me!