“எங்க ஏரியா உள்ள வராத” காட்டுக்குள் சென்ற நபரை துரத்தியடித்த யானை; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பயணி

By Velmurugan s  |  First Published Jun 8, 2023, 12:26 PM IST

கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் காரை விட்டு இறங்கி அடர் வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை காட்டு யானை துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை சார்பில் வாகனங்களில் அழைத்துச் சென்று வனவிலங்குகளை காண செய்கின்றனர். இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் சொந்த வாகனங்களில் கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்கின்றனர். 

Tap to resize

Latest Videos

அடர் வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சுற்றுலா பயணி ஒருவர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது கூட்டமாக இருந்த யானைக் கூட்டங்களில் இருந்து ஓர் யானை வனபகுதிக்குள் நுழைந்தவரை துரத்தியது. இதில் அவர் நூலிழையில் உயிர்தப்பினார்.

அசுர வேகத்தில் வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 2 பேர் பலி, 2 பேர் படுகாயம் 

சிறிது தூரம் யானை துரத்தியபோது விழுந்து எழுந்து தப்பித்தார். அப்போது அவ்வழியாக வந்த வயநாடு வனத்துறையினர் அந்த நபரை பாதுகாப்பாக அவர்களின் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வனவிலங்குகள் நடமாடும் பொழுது வாகனங்களில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதியில் இறங்கிய நபரை யானை துரத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பந்து விளையாடிய 10 வயது சிறுவன்: சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

click me!