"நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள்" நாடி நரம்பை முறுக்கேற வைத்த அபிநந்தன்!

By sathish kFirst Published Mar 2, 2019, 10:24 PM IST
Highlights

உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன் என பாக்கிஸ்தான் ராணுவத்தையே கண்சிவக்க வைத்திருக்கிறார் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்.

உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன் என பாக்கிஸ்தான் ராணுவத்தையே கண்சிவக்க வைத்திருக்கிறார் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்.

இதுகுறித்து அவர் அளித்த தன்னிலை விளக்கத்தில் ஒரு பகுதி இதோ; பத்திரிக்கையாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடையாது. அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன்.

பாகிஸ்தான் எல்லைக்குள் நான் இருக்கிறேன் என்பது தெரிந்த உடனே உயிரைக்குடுத்தேனும் தாய்நாட்டை காப்பேன் என்று பயிற்சி பெறும் போது நான் குடுத்த வாக்குறுதி தான் நினைவுக்கு வந்தது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு என்னிடமிருந்த ஒரு சில ஆவணங்களை ஓடைத்தண்ணீருக்குள் கிழித்து எரிந்தேன். முக்கியமான பேப்பரை என் வாய்க்குள் போட்டு மென்று முழுங்கினேன். 

தற்கொலை செய்துகொள்ள கூட நேரமிருந்தது. ஆனால் அது என்நாட்டுக்கு அவமானத்தை தரும். சித்திரவதைகளை அனுபவித்தே உயிரிழப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன்.

நான் பாக்கில் சிறைபட்டிருப்பது தெரிந்தால் ராணுவம் அதிரடியாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வழக்கமான சித்ரவதைக்கு பதிலாக எனக்கு ராஜமரியாதை கிடைத்தது. பிறகுதான் புரிந்தது இந்தியா எதோ ஒரு வகையில் நெருக்கடி குடுக்கிறது என்பது.

மறுநாள் நான் கூறமறுத்த என் குடும்ப ரகசியங்களை அவர்கள் என்னிடம் கூறியதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இருந்தாலும் என் குடும்பத்திற்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்பதில் திண்ணமாக இருந்தேன் என தொடர்ந்தார்.

click me!