பாகிஸ்தானையும், இம்ரான்கானையும் பாராட்டும் பண்பாளர்களே … அபி நந்தனுக்கு அங்கு என்ன நடந்தது தெரியுமா ? உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!

By Selvanayagam PFirst Published Mar 2, 2019, 8:32 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவமும், இம்ரான்கானும் எத்தனை மோசமானவர்கள் என்பது அபி நந்தனுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவரை விடுவித்ததற்காக இம்ரான் கானைப் பாராட்டுபவர்கள் பாகிஸ்தானின் நரித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் உண்மை அறிந்தவர்கள தெரிவித்துள்ளனர்.

அபி நந்தனை பாகிஸ்தான் ராணுவம் மிகச் சிறப்பாக நடத்தியது… பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அமைதி குறித்த பேச்சு போன்றவற்றைப் பற்றி  சிலாகித்துப் பேசும் சிலருக்கு அங்கு நடந்த உண்மை தெரியுமா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அபி நந்தன் சிறைப்பிடிக்கப்பட்டது முதல் அவர் விடுவிக்கப்பட்டது வரை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் சொன்ன பொய்கள் ஏராளம். அங்கு என்ன நடக்கிறது என்பதை அபி நந்தனுக்கு யாரும்,  எதுவும் சொல்லவில்லை. மேலும் தொலைக்காட்சி, ரேடியோ, ஃபோன் , செய்தித்தாள் என அனைத்தையும் தடை செய்து அபி நந்தன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 70 மணி நேரம் அவர் தனிமையில் விடப்பட்டார்.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்தைப் பாராட்டி ஒரு அறிக்கையை தயார் செய்து , அதை அபி நந்தனை  கட்டாயப்படுத்தி கூறச் செய்த கொடுமையும் பாகிஸ்தான் சிறையில் நடந்துள்ளது.

அபி நந்தன் அந்த அறிக்கையை  படிக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தியபோது, அவரை விடுவிக்க இம்ரான் கான் முடிவு செய்திருந்தது அபி நந்தனுக்கு  சொல்லப்படவில்லை. அந்த அளவுக்கு மனரீதியாக  அபி நந்தன் டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட இரு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அபி நந்தனின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அவரை கட்டாயப்படுத்தி சொல்லச் சொன்ன அந்த வீடியோ போலியானது என்பது அதில் இருந்த வெட்டுக்களைப் பார்த்தாலே புரிந்திருக்கும் என விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே  இம்ரான்கானைப் பாராட்டித் தள்ளும் பண்பாளர்கள் இனிமேலாவது உண்மையைத் உயர்ந்து அவர்களைப் போற்றுவ கை விட வேண்டும் என்று விவரம அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!