மனரீதியாக டார்ச்சர் கொடுத்த பாகிஸ்தான்... அம்பலப்படுத்திய அபிநந்தன்..!

Published : Mar 02, 2019, 07:17 PM IST
மனரீதியாக டார்ச்சர் கொடுத்த பாகிஸ்தான்... அம்பலப்படுத்திய அபிநந்தன்..!

சுருக்கம்

பாகிஸ்தான் ராணுவம் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட விங் கமாண்டர் அபிநந்தன் 70 மணி நேரங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்பட்டார். அவரை நேற்று லாகூரில் இருந்து சாலை மார்க்கமக அட்டாரி- வாகா எல்லையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு டெல்லி அழைத்து செல்லப்பட்ட அபிநந்தன் ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. 

 

விமானப்படை அதிகாரிகள், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட பலரும் மருத்துவமனை சென்று அபிநந்தனை உடல் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ’’பாகிஸ்தான் ராணுவம் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை. மனரீதியிலான துன்புறுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்’’ என செய்தி வெளியிட்டுள்ளது.   
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் முதல் AI கிளினிக் திறப்பு! அரசு மருத்துவமனையில் ஹை-டெக் ட்ரீட்மென்ட்!
Ramjet: முடிஞ்சா தடுத்து பாரு.. சென்னை ஐஐடி மரண மாஸ் கண்டுபிடிப்பு.. மிரளும் நாடுகள்!