அபிநந்தனை மருத்துவமனை அறைக்கே சென்று சந்தித்த ராணுவஅமைச்சர் நிர்மலா சீதாராமன்..! அபிநந்தன் கொடுத்த விளக்கம்..!

By ezhil mozhiFirst Published Mar 2, 2019, 5:57 PM IST
Highlights

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமானி அபிநந்தனை டெல்லி ராணுவ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
 

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமானி அபிநந்தனை டெல்லி ராணுவ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்.

புல்வாமா தாக்குதலால் 44 வீரர்கள் பலியானதை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டு தங்கியிருந்து பயங்கர வாத அமைப்பை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தது இந்தியா.

அதன் பின்னர் எல்லை கட்டுப்பாட்டை மீறி, பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில், இந்திய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே போல் பாகிஸ்தான் விமானமும் சுட்டு வீழ்த்தப் பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பாக் எல்லையில் பாராசூட் மூலம் இறங்கிய இந்திய விமானி அபிநந்தன் பாக் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு, இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று மாலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன். 

இவரின் வருகையை நாடே திருவிழா போல் கொண்டாடியது. பின்னர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் அபிநந்தன். இந்த தருணத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் உள்ள அபிநந்தனை அவரது அறைக்கு சென்று, உடல் நலம் விசாரித்தார். பின்னர், பாகிஸ்தானில் அவர் இருந்த 60 மணி நேர அனுபவத்தை விளக்கி உள்ளார். 

மேலும், ஞாற்றுக்கிழமை மாலை வரை அபிநந்தன் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அபிநந்தனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அபிநந்தனை சந்தித்தனர். இறுதியாக, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனுக்கு வாழ்த்து கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

click me!