பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு ‘INDIA' என பெயரிட்டது ஏன்? எதிர்க்கட்சிகள் விளக்கம்..

By Ramya s  |  First Published Jul 18, 2023, 4:29 PM IST

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்ட நிலையில் அதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதற்காக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவ சேனா, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய காங்கிரஸ், பிடிபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

பாஜகவை தேர்தலில் எதிர்ப்பதற்கான வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாப்பதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 36 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது INDIA - Indian national developmental inclusive alliance என்று பெயரிட்டுள்ளன. இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதை மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில், கூட்டணிக்கு எதிர்க்கட்சிகள் என்று பெயரிட்டது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  மோடிக்கு எதிராக யார்  என்று கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் vs இந்தியா அதாவது மோடிக்கு எதிராக இந்தியாவே உள்ளது என்பதற்கு சான்றாக இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் மோடிக்கு எதிரான பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்தியா என்று பெயரிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், மோடிக்கு இணையான தலைவர் இல்லை என்று பாஜக கருதுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா என்ற பெயரை தேர்வு செய்ததாகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தான் இந்த பெயரை தேர்வு செய்ததாகவும், பெரும்பாலான கட்சிகள் இந்த பெயரை ஏற்றுக்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் மோடி VS இந்தியா என்ற பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த முறை பாட்னாவில் நடந்த கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

” குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே அவர்களின் நோக்கம்” எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி..

click me!