கர்நாடக மாநிலத்தில் அரசுகளின் ஆட்சிக் கவிழ்க்கும் தீய சக்திகள் இருக்கும் சபிக்கப்பட்ட இடமாக விதான் சவுதா பெயர் பெற்றுவிட்டது. அதற்கு மாற்றாக சித்தராமையா கண்டுபிடித்த இடம்தான் கந்தீரவா மைதானம்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இன்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி ஏற்றிருக்கிறார்.
கடந்த காலங்களில் பல முதல்வர்கள் மாநில சட்டப்பேரவையான விதான் சவுதாவில் வைத்துதான் பதவிப்பிரமாணம் செய்து முதல்வராகப் பதவியேற்றனர். ஆனால் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா விதான் சவுதாவில் நடைபெறவில்லை. மாறாக, பெங்களூருவில் உள்ள கந்தீரவா மைதானத்தில் வைத்து நடத்தது. இந்த மாற்றத்துக்கு ஒரு ரகசியமான காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Video: திடீரென படியில் விழுந்து வணங்கிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - ஏன் தெரியுமா?
1952 ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் மாகாணத்தின் முதல்வராக இருந்த கெங்கல் ஹனுமந்தையாவால் கட்டப்பட்ட இந்த கம்பீரமான அமைப்பு, அதன் அழகிய முகப்பையும், நுழைவாயிலில் 45 பிரமாண்டமான படிக்கட்டுகளையும் கொண்டது. மாநிலத்தின் பெருமிதங்களில் ஒன்றாக விளங்கும் இந்த விதான் சவுதா கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாவது போற்றப்படுகிறது. ஆனால், விதான் சவுதாவில் பதவியேற்பு விழாக்களை நடத்திய ஆறு கர்நாடக முதல்வர்கள் தங்கள் முழு ஐந்தாண்டு பதவிக்காலத்தையும் முடிக்கவில்லை.
ஆட்சிகள் கவிழ பல காரணங்கள் இருந்திருக்கலாம், ஆனால் விதான் சவுதாவில் பதவேற்பவர்கள் ஆட்சியை இழப்பது தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. 9 முதல்வர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பதவி வகித்துள்ளனர். மேலும் பாதிக்கும் மேற்பட்ட முதல்வர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குக்கூட ஆட்சியைத் தக்கவைக்கவில்லை.
கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 நோட்டுகள்! ராஜஸ்தான் அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பறிமுதல்!
ஆனால், கர்நாடகாவின் 24வது முதல்வராக இன்று பதவியேற்ற சித்தராமையா, 2013ஆம் ஆண்டு செய்தது போல், கந்தீரவா மைதானத்தில் வைத்து பதவியேற்பு விழாவை நடந்த முடிவு செய்தார். 2013ஆம் ஆண்டு முதல்வரான சித்தராமையா தன் ஐந்தாண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தார். அவருக்கு முன் முழு பதவிக்காலத்தை முடித்தவர் முன்னாள் முதல்வர் தேவராஜ் உர்ஸ் மட்டுமே. அவரும் ராஜ்பவனில் பதவியேற்பை நடத்தாமல் ராஜ் பவனில் வைத்து நடத்தினார்.
இதனால் கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதா ஆட்சியைப் பறிக்கும் ராசியில்லாத இடமாகப் பார்க்கப்படுகிறது. சித்தராமையாவைப் பொறுத்தவரை கந்தீரவா மைதானம் கடந்த முறை வெற்றிகரமாக ஐந்தாண்டு ஆட்சியைப் பூர்த்தி செய்ய வைத்திருக்கிறது. இதனால்தான் அவர் இந்த முறையும் அந்த மைதானத்திலேயே முதல்வராகப் பதவியேற்பதை விரும்பி இருக்கிறார்.
ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை கட்டித் தழுவி தனது நட்பை பரிமாறினார்!!
இதற்கு முன், கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரான ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்பு விழாவை எங்கே வைக்கலாம் என ஜோதிடர்களுடன் விரிவான ஆலோசனை எல்லாம் நடத்தினார். ஆனால், விதான் சவுதாவின் துரதிர்ஷ்ட பிம்பத்தை உடைக்கும் நம்பிக்கையுடன் விதான் சவுதாவிலேயே முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், 14 மாதங்களில் அவரும் ஆட்சியை இழந்தார்.