விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்கள் யார் யார்? பயணிகளின் முழு பட்டியல் வெளியானது

By Ramya sFirst Published Jun 3, 2023, 11:21 AM IST
Highlights

3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் கோரமண்டல் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

ஒடிசாவில் நேற்று நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம். கோரமண்டல் ரயில் மட்டும் இந்த விபத்தில் சிக்கவில்லை. ஒடிசாவின் பாலசோர் அருகே கோரமண்டல் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இந்த ரயிலின் சுமார் 12 பெட்டிகள் சரிந்து, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயிலின் 3 முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது..

இதையும் படிங்க : இது முதன்முறை அல்ல.. 2009-ம் ஆண்டிலும் இதே கோரமண்டல் ரயில் தடம் புரண்டது.. அந்த விபத்து பற்றி தெரியுமா?

இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிகை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறது. அது சென்னை வந்து கொண்டிருந்த ரயில் என்பதால், தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் குழு ஒடிசா விரைந்துள்ளது. ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ரயில் விபத்து தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த பயணிகளின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “நமது வரலாற்றில் இது போன்ற மூன்றாவது பெரிய சம்பவம் இதுவாகும். மூன்று ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பல பெட்டிகள் நொறுங்கி, சிதைந்த நிலையில் இருந்தன. உயிருடன் இருப்பவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதால் மீட்பு பணிகள் சவாலாக உள்ளது” என்று தெரிவித்தார்.

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Coromandel Train Accident : இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து : அடுக்கடுக்காக எழும் கேள்விகள்..

click me!