யார் இந்த ராகுல் நவீன்? எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை இனி இவர் கையில்!!

By SG Balan  |  First Published Aug 14, 2024, 10:57 PM IST

மத்திய அரசின் பணமோசடி தடுப்பு அமைப்பான அமலாக்கத்துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான நவீன், இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.


மத்திய அரசின் பணமோசடி தடுப்பு அமைப்பான அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான நவீன் இரண்டு வருட காலத்திற்கு இந்தப் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் மிஸ்ராவுக்குப் பின், செப்டம்பர் 2023இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ராகுல் நவீன், இப்போது முழுநேர இயக்குநராக நியமனம் பெற்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

57 வயதான நவீன் 2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு இயக்குனராக சேர்ந்தார். பணமோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உலகளாவிய அமைப்பான பொருளாதார குற்ற நடவடிக்கை பணிக்குழு (FATF) மூலம் ஏஜென்சியின் பணிகளுக்கு தலைமை தாங்கினார்.

ஐஐடி கான்பூரில் பி.டெக் மற்றும் எம்.டெக் மற்றும் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் நவீன். சஞ்சய் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இவர், இடைக்கால இயக்குநராக இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இருவரும் தனித்தனி பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?

சர்வதேச வரி விதிப்பு விஷயங்களில் நிபுணரான நவின், பீகாரைச் சேர்ந்தவர். ஐடி துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். 2004-08 ஆம் ஆண்டு சர்வதேச வரிவிதிப்பு பிரிவில் அவர் பணியாற்றிய போது, ​​வோடபோன் வழக்கு உட்பட பல வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறையினர் தாக்கப்பட்ட பிறகு நவீன் மேற்கு வங்கத்திற்கு விரைந்தார். அதிகாரிகளை பயமின்றி வேலை செய்ய ஊக்கப்படுத்தியதுடன், வழக்கு நீர்த்துப்போகாமல் ஆவணங்களைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

"பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பிறவற்றின் கீழ் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை சரியான நேரத்தில் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு ஏஜென்சிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை மூன்று தண்டனை உத்தரவுகளைப் பெற்றுள்ளது" என்று மூத்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) சிவில் விதிகளைத் தவிர்த்து பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ஆகிய இரண்டு குற்றவியல் சட்டங்களின் கீழ் நிதிக் குற்றங்களை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவியை நீட்டித்து வந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. சஞ்சய் மிஸ்ரா பதவிக்காலத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்க பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்தது. சஞ்சய் மிஸ்ராவின் பதவியை நீட்டிக்காமல் வேறு ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் படிக்கணுமா? தூதரகம் நடத்தும் கல்விக் கண்காட்சியில் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!

click me!