ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம்!

By SG Balan  |  First Published Aug 14, 2024, 9:54 PM IST

அமலாக்கத்துறை இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார்.


அமலாக்கத்துறை இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார். இடைக்கால இயக்குநராக பணியாற்றிய அவர் இனி அதே பதவியில் முழுநேர பொறுப்பு வகிப்பார்.

சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அமலாக்கத்துறை இயக்குநர் பதவி காலியாக இருந்தது. அமலாக்கத்துறையின் அடுத்த இயக்குநராக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு உருவானது. சஞ்சய் குமார் மிஸ்ராவை 2018ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு அமலாக்கத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. அதன் பிறகு மத்திய அரசு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து வந்தது.

Tap to resize

Latest Videos

undefined

தொடர்ந்து சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவியை நீட்டித்து வந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. சஞ்சய் மிஸ்ரா பதவிக்காலத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்க பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்தது. சஞ்சய் மிஸ்ராவின் பதவியை நீட்டிக்காமல் வேறு ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட்டது.

செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?

 

"அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு வேறு யாரும் இல்லையா? முழு துறையுமே திறமையற்றவர்களால் நிரம்பியுள்ளதா?" என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியது. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பிறகு சஞ்சய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

யார் இந்த ராகுல் நவீன்? எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை இனி இவர் கையில்!!

click me!