இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை நினைவுகூர்கிறது. இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் காணலாம்.
இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை நாளை கோலாகலமாக கொண்டாட உள்ளது. ஆகஸ்ட் 15, 1947 அன்று நள்ளிரவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. விடுதலைக்காக நடந்த போராட்டங்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர தினத்தைப் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணித்த மகாத்மா காந்தி :
undefined
தேசப்பிதாவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவருமான மகாத்மா காந்தி, புதுடெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவை புறக்கணித்தார். கொல்கத்தாவில் அமைதியை மீட்டெடுக்கவும், பிரிவினையால் ஏற்பட்ட வகுப்புவாதத் கலவரங்களை கட்டுப்படுத்தவும் கலவரங்களுக்கு மத்தியில் கொல்கத்தாவில் அவர் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை.
சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றம்: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
இந்தியாவின் மூவர்ணக் கொடியின் முக்கியத்துவம்
1947 ஆகஸ்ட் 15- ல் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜூலை 22, 1947 அன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் கூட்டத்தில் இந்தியாவின் தேசியக் கொடியின் தற்போதைய வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூவர்ணக் கொடியின் காவி நிறம் நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது. வெள்ளை அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. பச்சை நிறம் நிலத்தின் வளம், வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதியை தேர்வு செய்தது யார்?
இந்தியாவின் சுதந்திரத்தை அறிவிக்க ஆகஸ்ட் 15 ஐத் தேர்ந்தெடுத்தவர், நாட்டின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு. ஜூன் 1948 க்குள் இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான அதிகாரங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவருக்கு வழங்கியது. இருப்பினும், வன்முறை மற்றும் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக, ஆகஸ்ட் 15, 1947 க்கு அவர் அதை முன்வைத்தார் என்று கூறப்படுகிறது. நேச நாட்டுப் படைகளிடம் சரணடைந்த ஜப்பானின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடுவதால் அவர் இந்த நாளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய தேசிய கொடி பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..
மங்களகரமான நேரத்தில் சுதந்திரம் பெற்ற இந்தியா
ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்த நாள் ஜோதிட ரீதியாக துரதிர்ஷ்டவசமானது என்று உஜ்ஜைனியைச் சேர்ந்த ஹர்தியோஜி மற்றும் சூர்யநரைன் வியாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற பிற நாடுகள்
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரே நாடு நாடு இந்தியா மட்டுமல்ல. இந்த நாளில் வட கொரியா, தென் கொரியா, பஹ்ரைன், காங்கோ குடியரசு மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன..