நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி யார்?

By Dhanalakshmi G  |  First Published Jun 9, 2023, 6:57 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயி, பிரதிக் ஜோஷி திருமணம் பெங்களூரில் உள்ள ஓட்டலில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக நடந்து முடிந்தது.


சாதாரணமாக திருமணம் என்றால் பணம் கொட்டி திருவிழாவாக நடத்தப்படுகிறது. நிச்சயதார்த்தம், நலுங்கு, மெஹந்தி, முகூர்த்தம் என்று தினம் ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதுவும் அரசியல்வாதி வீட்டு திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். 

சமூக ஊடகங்கள்:
ஆனால், இதெல்லாம் நிர்மலா சீதாராமன் வீட்டு திருமணத்தில் மிஸ்ஸிங். அட மாப்பிள்ளை யார் என்று கூட தெரியவில்லை. திருமணம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. திருமண படம் வெளியான பின்னரும் உண்மைதானா? என்று தேட வைத்தது. சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியான பின்னரே திருமணம் குறித்த தகவல் உறுதியானது.  ஆனால், மணமகன் யார் என்பதே திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் தெரிய வருகிறது.

Latest Videos

undefined

நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்!

யார் பிரதிக் ஜோஷி?
யார் அந்த பிரதிக் ஜோஷி. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். குஜராத்தைச் சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமான உதவியாளருக்கு ரிப்போர்ட் செய்கிறார் பிரதிக் ஜோஷி. பிரதமர் அலுவலகத்தில் ஆராய்ச்சி, திட்டங்கள் தொடர்பான வேலைகளை கையாண்டு வருகிறார். இணை செயலாளர் பதவிக்கு இணையான ரேங்கில் சிறப்புப் பணியில் இருக்கிறார். இதுமட்டுமின்றி பிரதமருக்கு செயலகம் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகிறார். கடந்த 2019, ஜூலை மாதம் உயர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

சம்பளம் இதுதான்:
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான லெவல் 14-ல் வழங்கும் சம்பளத்தை பெற்று வருகிறார். இவரது மாத அடிப்படை சம்பளம் பிரதமர் அலுவலக இணையத்தின் மூலம் ரூ. 1,57, 600 என்பது தெரிய வந்துள்ளது. இவர் சிங்கப்பூரில் மேலாண்மை கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 

வாங்மயி படிப்பு:
பரகலா வாங்மயி ஒரு பத்திரிகையாளர். அவர் தற்போது மின்ட் லவுஞ்சில் சிறப்பு எழுத்தாளராக உள்ளார். அவர் முன்பு தி இந்துவில் பணியாற்றினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். டெல்லி  பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அவர் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள மெடில் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது கட்டுரைகள் பல இந்திய மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 

எந்த அரசியல்வாதியும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். 

ரூ.500 நோட்டு வாபஸ்? ஆர்.பி.ஐ. ஆளுநர் விளக்கம்!

click me!