டி.கே. சிவக்குமார் மற்றும் அவரின் குடும்பம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த 5 நாட்களாக கர்நாடக முதல்வர் யார் என்பது தான் ஹாட் டாபிக். சித்தராமையாவா அல்லது டி.கே. சிவகுமாரா? கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. சித்தராமையா கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், டி.கே. சிவ குமார் துணை முதலமைச்சராக இருப்பார் என்றும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சரி.. டி.கே. சிவக்குமார் மற்றும் அவரின் குடும்பம் பற்றி தற்போது பார்க்கலாம்.
டி.கே.சிவகுமாரின் முழுப்பெயர் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார். இவர் கெம்பேகவுடா மற்றும் கவுரம்மா தம்பதியரின் மகன். இவர் பெங்களூருக்கு அருகிலுள்ள கனகபுராவில் பிறந்தார். ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த இவர். சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார்.
undefined
இதையும் படிங்க : துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு டி.கே. சிவகுமார் போட்ட முதல் ட்வீட் இதுதான்..
டி.கே சிவகுமார் 1980களில் மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு மைசூருவின் சாத்தனூர் தொகுதியில் வெறும் 27 வயதில் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். 1994, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அவர் அந்தத் தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு முதல் கனகபுராவில் இருந்து வெற்றி பெற்று வருகிறார்.
டி.கே.சிவகுமார் உஷா என்பவரை மணந்தார். அவர்கள் 1993 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆபரணா என்ற இரண்டு மகள்களும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளார். டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா மறைந்த காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவை மணந்தார். அமர்த்தியா எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரன். அதாவது அமர்த்தியாவின் தாயார் மாளவிகா எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆவார். மாளவிகா தான் கஃபே காபி டேயின் இயக்குனர். குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி என்ற தனது தந்தைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியை ஐஸ்வர்யா நடத்தி வருகிறார்.
இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக டி.கே.சிவகுமார் இருக்கிறார். அவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.15 கோடி ஆகும். 2018 ஆம் ஆண்டில், டி.கே. சிவகுமாரின் குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.850 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு தற்போது. 1400 கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.. உஷா சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.153.3 கோடி ஆகும்.
இவருக்கு 12 வங்கி கணக்குகள் உள்ளன. 225 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளார். அவருக்கு ரூ.970 கோடி அசையும் சொத்து உள்ளது. ரோலக்ஸ் உள்ளிட்ட ஆடம்பரமான வாட்ச் அவரிடம் உள்ளது. அவரிடம் 2.184 கிலோ தங்கம், 12.6 கிலோ வெள்ளி, 1.066 கிலோ தங்க நகைகள், 324 கிராம் வைரம், 24 கிராம் மாணிக்கங்கள், 195 கிராம் வைரம், 87 கிராம் ரூபி ஆகியவை உள்ளன.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் டி.கே.சிவகுமார் சமீபத்தில் நடந்த தேர்தலில் கனகபுரா தொகுதியில் 55000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குமாரசாமியின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சித்தராமையா ஆட்சியில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் சிக்கல்களை, பிரச்சனைகளை தீர்க்கும் நபராக டி.கே சிவகுமார் இருக்கிறார். சோனியா ராகுல்காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க : Who is Siddaramaiah?: 2வது முறை கர்நாடக முதல்வராகும் சித்தராமையாவின் அரசியல் வரலாறு