மத்திய சட்டத்துறை மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகப் மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகல், மத்திய சட்ட அமைச்சகத்திலிருந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கும் அவர் இணை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ராஷ்டிரபதி பவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனையின்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக இன்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சராக மாற்றப்பட்டார். அருண் ராம் மேக்வாலுக்கு சட்ட அமைச்சக பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 18.05.2023
ரிஜிஜு ஜூலை 8, 2021 அன்று சட்டம் மற்றும் நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் மே 2019 முதல் ஜூலை 2021 வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் (சுயாதீனப் பொறுப்பு) அமைச்சராகப் பணியாற்றியவர்.
சமீபத்தில் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை தொடர்பாக நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்திருந்தார். நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பை விமர்சித்த அவர், இது காங்கிரஸ் கட்சியின் "தவறான" விளைவு என்று கூறியிருந்தார்.
Who is DK Shivakumar?: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இப்போது சட்டத்துறையில் பொறுப்பு வகித்த கிரண் ரிஜிஜுவும் அவரது இணை அமைச்சரான எஸ்.பி. சிங் பாகலும் வேறு இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீதிபதிகளுக்கு அறிவுரை!
கடந்த மே 2ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் மகாராஷ்டிரா கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆங்கிலம் பேசும் வழக்கறிஞர்களுக்கு வெளிநாட்டு எண்ணங்கள் இருப்பது முறையல்ல என்றார்.
ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த பல நல்ல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆங்கிலத்தில் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணங்களில் இந்தியராக இருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
Who is Siddaramaiah?: 2வது முறை கர்நாடக முதல்வராகும் சித்தராமையாவின் அரசியல் வரலாறு