
மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், மத்திய சட்ட அமைச்சகத்திலிருந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.அங்கு அவர் மாநில அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ராஷ்டிரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் ஆலோசனையின்படி, இந்தியக் குடியரசுத் தலைவர், மாநில அமைச்சருக்குப் பதிலாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக, எஸ்.பி. சிங் பாகேலை நியமிக்குமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 2வது முறை கர்நாடக முதல்வராகும் சித்தராமையாவின் அரசியல் வரலாறு
முன்னதாக மத்திய சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து கிரண் ரிஜிஜு மாற்றம் செய்யப்பட்டார். அரசின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்த கிரண் ரிஜிஜு, கேபினட் அந்தஸ்துடன் சட்ட அமைச்சகத்திற்குப் பதவி உயர்வு பெற்று ஒரு வருடத்திற்குள் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு இப்போது மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இப்போது சட்ட அமைச்சகத்தின் பொறுப்பையும் வகிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர்..! பதவியேற்பு விழாவிற்கு கர்நாடகா செல்லும் மு.க. ஸ்டாலின்
சட்ட அமைச்சர் ஒருவர் கேபினட் அந்தஸ்தில் இல்லாதது சமீபத்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவின் குறுகிய பதவி காலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகளின் கொலிஜியம் அமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அவர் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், மத்திய சட்ட அமைச்சகத்திலிருந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.