சித்தராமையா 2006ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடி(எஸ்) கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் வெகுஜன ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா. இவர் மற்றொரு முன்னணி காங்கிரஸ் தலைவரான டி.கே. சிவகுமாரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்கப் போகிறார்கள்.
இவர்களின் பதவியேற்பு விழா பெங்களூருவில் சனிக்கிழமை (மே 20ஆம் தேதி) நடைபெற உள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்த நிலையில் இன்று முடிவு தெரிந்துள்ளது.
முதல்வராக இருக்கும் சித்தராமையா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியில் இருந்தவர். தேவகவுடாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2006-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ரூ.600 கோடி புதையல் இருப்பதாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பல் கைது
தற்போது 75 வயதாகும் சித்தராமையா, ஆகஸ்ட் 12, 1948 இல் பிறந்தார். சித்தராமையா மைசூர் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பை முடித்தார். 1983 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக லோக் தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட சித்தராமையா சாமுண்டேஸ்வரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியில் அவர் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். 3 முறை தோல்வியும் கண்டுள்ளார்.
1989 மற்றும் 1999 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தார். 2008ஆம் ஆண்டில், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தேர்தலுக்கான விளம்பரக் குழு தலைவராக இருந்தார். சித்தராமையா மாநிலம் முழுவதும் முழுவதும் பரவலாகப் போற்றப்படும் தலைவராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் கணிசமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர்.
பின், அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை சிறப்பாக வழிநடத்திய அவர் 122 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து முதல்வர் ஆனார். பிஜேபி ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்தாரலும், இறுதியில் பாஜக காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன்வசம் இழுத்து ஆட்சியைப் பிடித்தது. பின்னர் கர்நாட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமிக்கப்பட்டார்.
''சில நேரத்தில்'' காங்கிரஸ் தலைவர் ''அந்த'' முடிவை எடுப்பார்: டி.கே. சிவகுமார் வைத்த மர்மம்!!
2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சித்தராமையா, பதவிக்காலம் முழுவதும் வெற்றிகரமாக ஆட்சி செய்த அனுபவம் பெற்றவர். 13 மாநில பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர். அஹிண்டா எனப்படும் சிறுபான்மையினர், பின்தங்கியோர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளார்.
8 முறை எம்.எல்.ஏ., ஆன இவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இயல்பைக் கொண்டவர். 2018ஆம் ஆண்டில், அவர் தனது தனது வருணா தொகுதியை தன் இளைய மகன் டாக்டர் யதீந்திர சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுத்தார். 2023 இல், அவர் 60% வாக்குளைப் பெற்று வென்றார்.
பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகளை திறமையாக எதிர்க்கொள்ளக்கூடியவர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக விமர்சிக்கக்கூடியவர். ராகுல் காந்தியுடனும் நெருங்கிய உறவைக் கொண்டவர்.
துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன்? டி.கே சிவக்குமார் விளக்கம்