திருமணத்தன்று மணமக்கள் செய்த காரியம்.. மணமகன் உயிரிழப்பு.. மணமகள் கவலைக்கிடம்.. நடந்தது என்ன?

Published : May 18, 2023, 03:13 PM IST
திருமணத்தன்று மணமக்கள் செய்த காரியம்.. மணமகன் உயிரிழப்பு.. மணமகள் கவலைக்கிடம்.. நடந்தது என்ன?

சுருக்கம்

திருமண தினத்தன்று மணமகன் திடீரென விஷம் குடித்துள்ளார். அவரை தொடர்ந்து மணமகளும்  விஷம் குடித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

திருமண நாளன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மணமக்களுக்கு கடந்த செவ்வாய் கிழமை கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர். இந்நிலையில், திருமண தினத்தன்று மணமகன் திடீரென விஷம் குடித்துள்ளார். அவரை தொடர்ந்து மணமகளும்  விஷம் குடித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணமகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மணமகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த பல நாட்களாக மணமகள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், சில காரணங்களுக்காக திருமணம் இப்போது வேண்டாம் என்றும் இரண்டு ஆண்டு அவகாசம் வேண்டும் என்று கூறிவந்துள்ளார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் போலீசில் புகார் அளிக்கவே வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை மணமகன் மணமகளிடம் கூற, அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

திருப்பதியில் ரூ.54 கோடி சால்வை மோசடி! பட்டுக்கு பதில் பாலியஸ்டரை கொடுத்தது அம்பலம்!
அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!