துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, டி.கே சிவகுமார் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 13-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா – கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதனால் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.
இதையும் படிங்க : நாடே எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுக்கு நல்ல தீர்ப்பு.! தமிழ் மண்ணை,மக்களின் இதயத்தை குளிரவைத்துள்ளது- விஜயபாஸ்கர்
undefined
சித்தராமையா, டி.கே. சிவகுமார் இருவரும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர். மேலும் கர்நாடக முதல்வர் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடனும் கார்கே ஆலோசனை நடத்தினார். அதன்படி சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் இருந்தது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஒருவழியாக நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தான் என்ற அறிவிப்பை காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்க உள்ளார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காந்தி குடும்பத்தினரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.
இந்த நிலையில் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, டி.கே சிவகுமார் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே சிவகுமார், சித்தராமையாவின் கைகளை பிடித்திருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Karnataka's secure future and our peoples welfare is our top priority, and we are united in guaranteeing that. pic.twitter.com/sNROprdn5H
— DK Shivakumar (@DKShivakumar)
இதையும் படிங்க : மத்திய அமைச்சரவை மாற்றம்.. கிரண் ரிஜிஜுவுக்கு புதிய துறை ஒதுக்கீடு.. புதிய சட்ட அமைச்சர் யார் தெரியுமா?