மே.21 கர்நாடகாவில் பதவியேற்கும் புதிய அமைச்சரவை… அதேநாளில் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!!

Published : May 18, 2023, 06:19 PM IST
மே.21 கர்நாடகாவில் பதவியேற்கும் புதிய அமைச்சரவை… அதேநாளில் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!!

சுருக்கம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளான வரும் 21 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர உள்ள நிலையில் அதே நாளில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளான வரும் 21 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர உள்ள நிலையில் அதே நாளில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளான வரும் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சரவையில் மேலும் ஒரு மாற்றம்... சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து கிரண் ரிஜிஜு மாற்றம்!!

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் முதலமைச்சர் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார்.  கடந்த ஆண்டும் ராஜீவ்காந்தியின் நினைவு நாளன்று தமிழகம் வந்த ராகுல்காந்தி, ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?

அதேபோல் சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல்காந்தி வர உள்ளார். இதுஒருபுறம் இருக்க அதே நாளில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!