இந்தியாவின் நடவடிக்கைகள் தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கை விரிவுபடுத்தும் லட்சியத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
சர்வதேச நாடுகளின் கவனம் இஸ்ரேல் ஹமாஸ் போர் மீது குவிந்துள்ள நிலையில் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவ முதலீடுகளை அதிகரித்துள்ளன. இந்தியா மொரிஷியஸின் அகலேகா தீவுகளில் கடற்படை தளத்தை உருவாக்கி வருகிறது.
மொரிஷியஸின் அகலேகா தீவுகள் சுற்றுலா மற்றும் தொழில்துறையால் தொடப்படாத ஒரு அழகிய தீவாக இருந்து வருகிறது. சுமார் 300 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்த தீவில் உள்ள மக்கள் தென்னை மற்றும் மீன்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அமைதியான இந்தத் தீவில் நில அதிர்வு அபாயமும் உள்ளது.
undefined
உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளைக் கொண்ட இந்தப் பிராந்தியத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க அளவக்கு தனது வசதிகளை மேம்படுத்தியுள்ளது. முன்பு, இங்கு மீன்பிடி படகுத்துறையும் ஒரு சிறிய விமான நிலையமும்தான் இருந்தது. 2021ஆம் ஆண்டில், அகலேகாவின் வடக்கு தீவில் இந்தியா விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது. ராணுவ விமானங்களைக் கையாளக்கூடிய புதிய விமானப் பாதையில் பணிபுரிய குறைந்தபட்சம் 50 அதிகாரிகளை அனுப்ப உள்ளது.
ககன்யான் பரிசோதனை வெற்றி! விண்ணில் சீறிப் பாய்ந்தது மாதிரி விண்கலம்! இஸ்ரோ அறிவிப்பு
இந்த நடவடிக்கைகள் தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்தும் லட்சியத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
இந்தியாவின் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம், அந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான். கடந்த 25 ஆண்டுகளாக, சீனா தொடர்ந்து தனது தடத்தை அங்கு விரிவுபடுத்தி வருகிறது. நியூயார்க்கில் உள்ள வெளியுறவுத்துறை கவுன்சிலில் நடந்த விவாதத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இதை எடுத்துரைத்துப் பேசியுள்ளார். சீன கடற்படையின் வளர்ச்சி, இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் கவலைகளை எழுப்பியுள்ளதை விளக்கியிருக்கிறார்.
சீனாவின் ஒரே வெளிநாட்டு ராணுவ தளம் ஜிபூட்டியில் உள்ளது. அதையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற பிராந்தியங்களில் சீனா உருவாக்கிய துறைமுகங்களையும் இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கடற்கொள்ளையர், கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட கடல்சார் அபாயங்கள் இந்தப் பகுதிகளில் அதிகமாக உள்ளன. சர்வதேச கடல்சார் சட்டங்கள் அமலாக்கப்படாததால் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.
புதிதாக உருவாகியுள்ள அகலேகா ஓடுதளம் இந்தியாவிற்கு பல வகையில் முக்கியமானதாக இருக்கிறது. இது கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் மொசாம்பிக் கால்வாயில் கடல் ரோந்துகளை மேம்படுத்த முடியும். தென்னாப்பிரிக்காவைச் சுற்றியுள்ள கப்பல் வழிகளைக் கண்காணிப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் எதிரொலி... கூகுள், மெட்டா நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு