இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா?

By Ramya s  |  First Published Oct 21, 2023, 12:51 PM IST

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்  இருந்து ககன்யான் பயணத்திற்கான முதல் படியைக் குறிக்கும் வகையில் இஸ்ரோ இன்று ஆட்கள் இல்லாத விமானச் சோதனையை மேற்கொண்டது.


ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக ககன்யான் மிஷன் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 3 கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்  இருந்து ககன்யான் பயணத்திற்கான முதல் படியைக் குறிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று ஆட்கள் இல்லாத விமானச் சோதனையை மேற்கொண்டது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டிவி-டி1 ஃப்ளைட் டெஸ்ட் என அழைக்கப்படும் முதல் ஆளில்லா விமான சோதனை, இன்று காலை 8 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் மோசமான வானிலை காரணமாக, சோதனை காலை 8.45 ஆக மாற்றியமைக்கப்படது. ஆனால் ஏவுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. பின்னர் மற்றொரு நாளில் சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் சோதனைக்கலன் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த டிவி-டி1 மிஷன் வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்திற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள்

இந்த ககன்யான் பணிக்கு பின்னால் பணியாற்றியவர்களில் எஸ் சோம்நாத், எஸ் உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் விஆர் லலிதாபிகா முக்கியமானவர்கள் ஆவர். எஸ்.சோம்நாத் இஸ்ரோவின் தற்போதைய தலைவராகவும், உன்னிகிருஷ்ணன் நாயர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகவும், வி.ஆர்.லலிதாம்பிகா இஸ்ரோவில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியாகவும் உள்ளார். இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், இந்தியாவின் நிலவு பயணத்தின் மூளையாகக் கருதப்படுகிறார். ஆதித்யா-எல்1 (சூரியனுக்கான மிஷன் ) மற்றும் ககன்யான் (குழுவிலான பணி) போன்றவற்றை துரிதப்படுத்தியதற்காக மற்ற பணிகளுக்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

வி.ஆர்.லலிதாம்பிகா இஸ்ரோவில் 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார், மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அவர் பெற்றுள்ளார். மேலும் அனைத்து இந்திய ராக்கெட்டுகளான போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி), ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (ஜிஎஸ்எல்வி) மற்றும் உள்நாட்டு விண்வெளி விண்கலம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

ககன்யான் பரிசோதனை வெற்றி! விண்ணில் சீறிப் பாய்ந்தது மாதிரி விண்கலம்! இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோவின் ககன்யான் பணிக்கு பின்னால் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை இஸ்ரோ இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி விமானம் நெருங்கி வருவதால், இஸ்ரோ குழுவினர் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் இந்தியாவின் முயற்சியில் இந்த ககன்யான் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது. வங்காள விரிகுடா கடலில் 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதற்கான இந்தியாவின் திறனை நிரூபிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தி. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியாவை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!