ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமா ஈடுபட்டு வருகிறது.
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமா ஈடுபட்டு வருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன் 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
undefined
இதையும் படிங்க;- இஸ்ரோவின் அடுத்த மூவ்.. மிஷன் ககன்யான்.. நாளை நடைபெறும் சோதையோட்டம் - லைவில் பார்க்கலாமா? முழு விவரம் இதோ!
அதன்படி முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தை தரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பாராசூட் மூலம் பூமிக்கு கொண்டுவந்து வங்க கடலில் இறங்க செய்து சோதனை நடத்தப்படும். இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடல் நீரில் கலன் விழுந்த உடன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள். முன்னதாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா, சந்திரயான் அனுப்பி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.