சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு சோனியா காந்தி ஏன் அடிக்கல் நாட்டினார்? பாஜக கேள்வி?

By Dhanalakshmi G  |  First Published May 25, 2023, 8:55 AM IST

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே, 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். 


இதுதொடர்பாக பரபரப்பான அரசியல் நடந்து வருகிறது. 20 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக, விசிக ஆகிய கட்சிகளும் அடங்கும். அதிமுக பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஏன் திறந்து வைக்கிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸின் இந்த எதிர்ப்பிற்கான காரணத்தை பலரும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்து இருப்பதாவது:
தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடம் 1927 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது இந்தியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தை அப்போதைய வைஸ்ராய் பிரபு இர்வின் திறந்து வைத்தார்.  

Tap to resize

Latest Videos

இதை அப்போதே காங்கிரஸ் எதிர்த்திருக்கலாம். காலனித்துவ ஆக்கிரமிப்பை நிலைநாட்டியவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்று வாதிட்டு இருக்கலாம். அல்லது காங்கிரஸின் தற்போதைய தர்க்கத்தின்படி பார்த்தால், பிரிட்டன் மன்னர்தான் நாடாளுமன்ற அமைப்பின் உண்மையான அரசியலமைப்புத் தலைவர் என்றும் வைஸ்ராய் அல்ல என்றும் கூறி இருக்கலாம்.  நாடாளுமன்ற கட்டடத்தை வைஸ்ராய் ஏன் திறந்து வைத்தார்? அதற்குப் பதிலாக பிரிட்டன் மன்னர்தான் திறந்து வைக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் கலந்துகொள்வோம் நஐர் கூறி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அத்தகைய அபத்தமான வாதத்தை அப்போது எடுத்து வைக்கவில்லை. தற்போது, பிரதமர் நரேந்திர மோடிக்காக மட்டுமே இதுபோன்ற வாதங்களை காங்கிரஸ் முன் வைத்து வருகிறது.  

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!

மோடி மீது வெறுப்பு:
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸின் பார்வையில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் அந்தஸ்து, பிரிட்டன் அரசால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டை விட குறைவாக இருக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. காங்கிரசுக்கு இரண்டு முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. முதலாவது, பிரதமர் நரேந்திர மோடி மீதான வெறுப்பு. இரண்டாவது, காந்தி குடும்பத்தின் சொத்து இந்தியா என்ற எண்ணம். 

அப்படி இல்லை என்றால் 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கான கூட்டத்தில் காங்கிரஸ் ஏன் புறக்கணித்தது? அப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் உடனிருந்தனர். அப்போது என்ன லாஜிக்? 

உலக தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம்!! வியக்க வைக்கும் போட்டோஸ்!!

சோனியா காந்தி சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு அடிக்கல் நாட்டினார். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? காங்கிரஸின் தர்க்கத்தின்படி, சத்தீஸ்கர் ஆளுநர் (மாநிலங்களில் ஜனாதிபதிக்கு இணையானவர்) சட்டப்பேரவைக்கு அடிக்கல் நாட்டி இருக்க வேண்டும். ஆனால் ஆளுனரை மறந்துவிடுங்கள். முதல்வருக்குக் கூட அந்த உரிமை வழங்கப்படவில்லை. காங்கிரஸில் எல்லாமே காந்தி குடும்பத்தைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதனால்தான் அரசியல் சாசன அந்தஸ்து இல்லாமல் சட்டபேரவை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் சோனியா காந்தி.

சுருக்கமாக, புதிய நாடாளுமன்றத்தின் பின்னணியில் உள்ள பிரச்சினை ஜனாதிபதி திறக்க வேண்டுமா? இல்லையா? என்பது அல்ல. இது மோடி மீதான வெறுப்பு மற்றும் காந்தி குடும்பத்திற்கான  உரிமை என்று காங்கிரஸ் கட்சியினர் பார்க்கின்றனர் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!