ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
அரசுமுறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, விமான நிலைய வரவேற்பு விழாவில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா;- 'பிரதமர் மோடியின் ஆட்சி முறையை உலகமே பாராட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உங்களிடம் ஆட்டோகிராப் கேட்டார். பப்புவா நியூ கினியாவின் பிரதமரின் கால்களைத் தொட்டார். இந்நிகழ்வுகள் தலைமையிலான இந்தியாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை காட்டுகிறது என்றார்.
இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி;- தமிழ் மொழி நம்முடைய மொழி. அது ஒவ்வொரு இந்தியனின் மொழி. உலகின் பழமையான மொழி. பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஏன் உலகிற்கு தடுப்பூசிகளை கொடுத்தேன் என்று அங்குள்ளவர்கள் என்னிடம் கேட்டார்கள். இது புத்தர், காந்தியின் தேசம் என்று சொல்ல விரும்புகிறேன். நமது எதிரிகள் மீதும் நாம் அக்கறை கொள்கிறோம். இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ள இன்று உலகமே ஆர்வமாக இருக்கிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.