droupadi murmu: india: new delhi: திரெளபதி என்பது உண்மை பெயரா? இயற்பெயர் ரகசியத்தை வெளியிட்ட ஜனாதிபதி முர்மு

By Pothy Raj  |  First Published Jul 25, 2022, 1:09 PM IST

ஜனாதிபதி திரெளபதி முர்முவின் இயற்பெயர் என்ன, திரெளபதி என்ற பெயரை யார் வைத்தது என்பது குறித்து ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி திரெளபதி முர்முவின் இயற்பெயர் என்ன, திரெளபதி என்ற பெயரை யார் வைத்தது என்பது குறித்து ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ராய்ரங்கபூர் கிராமத்தில் பைடாசாபோசி பகுதியில் பிறந்தவர். ஒடிசா பழங்குடி மக்களில் சாந்தாலி இனத்தில் பிறந்தவர் முர்மு. நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியும், 2வது பெண் ஜனாதிபதியும் என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஜனாதிபதி முர்முவுக்கு கடந்த 1980ம் ஆண்டு, ஷியாம் சரண் என்பவரைத் திருமணம் செய்தார். இருவருக்கும் 3 குழந்தைகள் பிறந்தனர். இரு மகன்கள் உயிரிழந்துவிட்டனர், கணவரும் காலமாகிவிட்டார். தற்போது, முர்முவுக்கு, இட்ஸ்ரீ முர்மு என்ற மகளும் உள்ளனர். அவர் வங்கியில் பணியாற்றி வருகிறார்

ஏழை மக்கள் கனவு, ஆசைகள் நிறைவேறும் என்பது என் தேர்வில் நிரூபணம்: ஜனாதிபதி முர்மு பேச்சு

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தலைமைநீதிபதி என்.வி.ரமணா , முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியும், 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவைச் சேர்ந்த தனியார் சேனலுக்கு திரெளபதி முர்மு பேட்டியளித்தார். அப்போது தனது இயற்பெயர் குறித்த ரகசியத்தை வெளியிட்டார். அவர் கூறுகையில் “ திரெளபதி முர்மு என்பது எனது இயற்பெயர் அல்ல. சாந்தாலி பிரிவில் என்னுடைய பெயர் புதி. ஆனால் திரெளபதி என்று என்னுடைய பள்ளி ஆசிரியர்தான் பெயர் வைத்தார்.

திரெளபதி என்னுடைய இயற்பெயர் அல்ல. என்னுடைய பள்ளி ஆசிரியர், அதாவது என்னுடைய மாவட்டத்தைச் சேராத வேறு ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைத்த பெயர். 

ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கணவர் யார்? 2 மகன்களையும் எப்படி இழந்தார்? எத்தனை குழந்தைகள்?
1960களில்பழங்குடிகள் அதிகமாக இருக்கும் மயூர்பஞ்ச் மாவட்டதிலிருந்துதான் பாலாசூர் அல்லது கட்டாக்கிற்கு ஆசிரியர்கள் செல்ல முடியும். என்னுடைய இயற்பெயரை ஆசிரியர்கள் விரும்பவில்லை. நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக திரெளபதி என்று சூட்டினார்கள்

என்னுடைய பெயர் பலமுறை மாறியுள்ளது. துர்பதி, தோர்பதி என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால், சாந்தாலி கலாச்சாரத்தில் இயற்பெயர் அழியாது. 

ஒரு பெண் குழந்தை பிறந்தால், தாய்வழிப்பாட்டி பெயர் வைப்பதும், ஆண் குழந்தை பிறந்தால், தந்தைவழிதாத்தா பெயர் வைப்பதும் பாரம்பரியமாக இருக்கிறது. 
இவ்வாறு முர்மு தெரிவித்தார்

குழந்தைகளுக்காக இதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்... ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை!!

திரெளபதி முர்முவுக்கு துடு என்ற புனைப்பெயரும் இருக்கிறது. ஷியாம் சரண் துடுவைத் திருமணம் செய்தபின்புதான் முர்மு என்று பெயர் மாற்றிக்கொண்டார்
 

click me!