Droupadi Murmu: ஏழை மக்கள் கனவு, ஆசைகள் நிறைவேறும் என்பது என் தேர்வில் நிரூபணம்: ஜனாதிபதி முர்மு பேச்சு

By Pothy RajFirst Published Jul 25, 2022, 12:01 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் கனவு காண்பதோடு முடிந்துவிடாது, அவர்களின் ஆசைகளும் நிறைவேறும் என்பது என்னுடைய தேர்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமித்ததோடு தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் கனவு காண்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் ஆசைகளும் நிறைவேறும் என்பது என்னுடைய தேர்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமித்ததோடு தெரிவித்தார்.

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா , முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியும், 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றார்.

நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதவி ஏற்றபின் அவர் பேசியதாவது: 

இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு மட்டும் காண முடியாது, அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் நிறைவேறும், அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பது என்னுடைய தேர்வில் உறுதியாகியுள்ளது. 

ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கணவர் யார்? 2 மகன்களையும் எப்படி இழந்தார்? எத்தனை குழந்தைகள்?

ஏழைகள், தலித்துகள், பழங்குடி மக்கள் அனைவரும் என்னிலிருந்து பிரதிபலிப்பை காண முடியும். இந்த மாற்றம் எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருகிறது.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயர்நீத்த வீரர்கள், தியாகிகளுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். ஒவ்வொருவரின் முயற்சி, ஒவ்வொருவரின் கடமை என்ற நிலையை நோக்கி நாம் நகர்ந்தால்தான் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

இந்த தேசம், 75வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாடும் தருணத்தில் நான் ஜனாதிபதியாக பதவி ஏற்பது என் நல்லகாலம். பழங்குடி மக்கள் வாழும் சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன், தொடக்கக் கல்விக்குப்பின் உயர்கல்வி கனவாக இருந்தது. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் என்னுடைய கிராமத்தில் நான்தான் முதலில் கல்லூரிக்கு படிக்கச் சென்றேன்.

ஓய்வு பெற்றார் ராம்நாத் கோவிந்த்..! மத்திய அரசு ஒதுக்கிய பங்களா எங்கிருக்கிறது என தெரியுமா..?

பழங்குடியினத்தைச் சேர்ந்த நான் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுகிறது. வளர்ச்சியை நோக்கி நகரும் தேசத்தில் பிறந்திருக்கிறோம் என்பதில் பெருமையாக இருக்கிறது.

நான் இந்தியர்களுக்கு அளிக்கும் வாக்குறுதி என்னவென்றால், இளைஞர்கள், பெண்களின் நலன் நான் ஜனாதிபதியாகஇருக்கும்வரை காக்கப்படும். 

ஒரே இந்தியா, மிகப்பெரிய இந்தியாவை இந்த தேசம் கட்டமைத்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் புதிய அத்தியாயத்தை இந்தியா எழுதி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தியவிதம், 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது பாராட்டுக்குரியவை. 

குழந்தைகளுக்காக இதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்... ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை!!

இந்த தேசம் தனது மக்களை மட்டும் பாதுகாக்காமல், உலகில் உள்ள பல நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி உதவியது. இந்தியாவின் மீது உலகம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்தள்ளது. 

இவ்வாறு ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
 

click me!