ஓய்வு பெற்றார் ராம்நாத் கோவிந்த்..! மத்திய அரசு ஒதுக்கிய பங்களா எங்கிருக்கிறது என தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Jul 25, 2022, 11:47 AM IST
Highlights

குடியரசு தலைவராக கடந்த 5 ஆண்டுகள் பதவி வகித்த ராம்நாத் கோவிந்த் இன்று ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லம் அருகே அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
 

ராம்நாத் கோவிந்திற்கு புதிய பங்களா

நாட்டின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022  ஆம் ஆண்டு வரை அலங்கரித்தவர் ராம்நாத் கோவிந்த், நேற்றோடு (ஜூலை 24) பதவி காலம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியா விடை கொடுத்தனர். இதனையடுத்து குடியரசு தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு டெல்லியில் மத்திய அரசு சார்பாக பங்களா ஒதுக்குவது மரபாகும் அந்த வகையில் ராம்நாத் கோவிந்திற்கும் டெல்லியில் 5 அறை கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் 300க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இடத்தில் இருந்த முன்னாள் குடியரசு தலைவருக்கு தற்போது  5 அறைகள் கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்பு.. நேரலை..!

குழந்தைகளுக்காக இதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்... ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை!!

சோனியா காந்தி வீடு அருகே பங்களா

 ஏற்கனவே ஜன்பத் சாலையில்  உள்ள 10ஆம் எண்ணில் உள்ள பங்களாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வசித்து வருகிறார்.  தற்போது ராம்நாத் கோவிந்திற்கு 12 ஆம் எண் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் ஏற்கனவே ராம்நாத் கோவிந்த் தனது பொருட்களை கொண்டு சென்றுள்ளார். இந்த பங்களாவில் இதற்க்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து புதிய பங்களாவிற்கு ராம்நாத் கோவிந்தை புதிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழியனுப்பி வைத்தார். 

இதையும் படியுங்கள்

Droupadi Murmu: ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கணவர் யார்? 2 மகன்களையும் எப்படி இழந்தார்? எத்தனை குழந்தைகள்?

click me!