உலகிலேயே சுதந்திராமான நீதித்துறை, நீதிபதிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறிய கருத்துக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில் அளித்துள்ளார்
உலகிலேயே சுதந்திராமான நீதித்துறை, நீதிபதிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறிய கருத்துக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில் அளித்துள்ளார்
முன்னாள் நீதிபதி சத்ய பிரபாசின்ஹா நினைவாக கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை நடந்தது. அதில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, காட்சி ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில் “ஒரு வழக்கை முடிவு செய்வதில் ஊடகங்களின் விசாரணை உதவி செய்யும் காரணியாகஇருக்காது. அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட முடிவெடுப்பது கடினம் என்று கூறி ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன. தவறானத் தகவல், உள்நோக்கம் கொண்ட விவாத நிகழ்ச்சி, ஆகியவை ஜனநாயகத்துக்கு கேடுவிளைவிப்பது நிரூபணமாகிறது.
ஊடகங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றன; தலைமைநீதிபதி என்.வி.ரமணா குற்றச்சாட்டு
ஒருதரப்பான கருத்துக்களை ஊடகங்கள் பரப்புவது, மக்களைப் பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது, இந்த செயல்பாட்டு முறைக்கே கேடாக இருக்கிறது. இந்த முறையால் நீதிபரிபாலன முறையும் பாதிக்கப்படுகிறது. அதிகமான முன்னுரிமை, உங்கள் பொறுப்புகளைக் கடந்து நடத்தல் போன்றவை ஜனநாயகத்தை இரு அடி, பின்னோக்கி நகர்த்துவதாகும்.
ஒருங்கிணைந்த பிரச்சாரங்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துகள், ஊடகத்தின் விசாரணை, நீதிமன்றம் செயல்பாட்டை பாதிக்கும்.
அச்சு ஊடகங்களுக்கு இன்றுவரை சிறிது நம்பக்தன்மை இருக்கிறது. ஆனால், மின்னணு ஊடகங்களுக்கு நம்பகத்தன்மையே இல்லை, அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. சமூக ஊடகங்களில் மோசமாக நடக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
கோவா-வில் சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியின் மகள்: பதவி நீக்குங்கள் : காங். குற்றச்சாட்டு
இதற்கு பதில் அளித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “ இந்திய நீதிபதிகள், நீதித்துறை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. உலகில் இந்தியாவில் இருப்பதுபோல் நீதிபதிகளும், நீதிதித்துறையும் எந்தநாட்டிலும் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும்.
விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : காப்பாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
ஊடகங்கள் வழக்கு விசாரணையில் ஈடுபடுதாக தலைமை நீதிபதி கருத்துக்களைத் தெரிவித்தது என்பது, உலகளவிலும், இந்தியாவிலும் இருக்கும் நிலையின் அடிப்படையில் தெரிவித்தார். அதுபோன்று யாரேனும் உணர்ந்தால், நாம் பொதுவெளியில் விவாதிக்கலாம். ஆனால், தலைமை நீதிபதி பேசியது குறித்து நான் கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.