மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு! வன்முறையில் பூத் ஏஜெண்டு உட்பட 14 பேர் பலி!

By SG Balan  |  First Published Jul 8, 2023, 10:08 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதும் நடந்த வன்முறை சம்பவங்களில் குறைந்தது 14 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.


மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பூத் ஏஜெண்டுகள் உள்பட 14  பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூச்பெகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளானர். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 73,887 இடங்களுக்கான இந்தத் தேர்தலில் மொத்தம் 2.06 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் தொடர்கின்றன. இந்த வன்முறை நிகழ்வுகளில் 12 வயது சிறுவன் உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலை ஒட்டி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக 65,000 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்க காவல்துறையும் 70 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வன்முறை வெடித்தது.

Explained: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் யாருக்கு கிடைக்கும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கூச்பெகர் மாவட்டத்தில் உள்ள சிதாயில் பாரவிடா தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே வன்முறையாளர்கள் புகுந்து வாக்குச்சாவடியை சூறையாடினர். வாக்குச் சீட்டுகளுக்கும் தீ வைத்தனர். தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கையில் துப்பாக்கி, சாக்கடையில் வாக்குப் பெட்டி; மேற்குவங்கத்தில் பயங்கரம்!!

பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராம் பிளாக் 1ல் வசிக்கும் மக்கள், மகமதுபூர் பகுதியில் உள்ள 67 மற்றும் 68ஆம் எண் வாக்குச்சாவடிகளில் மத்தியப் படைகள் நிறுத்தப்படும் வரை வாக்குப்பதிவு செய்ய வரமாட்டோம் என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறுகின்றனர்.

ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் வடக்கு பர்கானாஸில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்ததார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர், ரவுடிகள் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. என் வாகனத்தை வழிமறித்து மக்கள் புகாரளிகின்றனர். ஜனநாயகத்தின் புனிதமான நாளான இன்று, தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது'' என்றார். 

மனீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கம்! டெல்லி மதுக்கொள்கை ஊழலில் அமலாக்கத்துறை நடவடிக்கை

முர்ஷிதாபாத்தில் வெள்ளிக்கிழமை இரவு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸின் தொண்டர்கள் மோதிக்கொண்டதால் ஒரு வீடு சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மோதலைக் கட்டுப்படுத்தினர். சில இடங்களில் இளைஞர்கள் வாக்குப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடினர். சில இடங்களில் பெண்கள் வாக்குப் பெட்டிகளை சாக்கடை கால்வாய்களில் வீசிச் சென்றனர்.

மற்றொரு சம்பவத்தில், பாஜக வேட்பாளரின் வீடு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தின்ஹாட்டாவின் கல்மாட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது கூச்பெகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். எனினும் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு! சித்தராமையா கொடுத்த வாக்குறுதி!

click me!