ஒற்றைக் காலில் நின்று ஜெயித்த மம்தா பானர்ஜி... தவிடு பொடியான பாஜக வேட்பாளரின் ராஜ தந்திரம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 4:56 PM IST
Highlights

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் பின்தங்கினார். தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி மீண்டும் அரியணையில் அமர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 292 (294) தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி என மும்முனைப் போட்டி காணப்பட்ட போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டிக் காணப்பட்டது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்து வந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய சுவேந்து அதிகாரி, இந்த தேர்தலில் அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்கு இருக்கும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். என்னை எதிர்த்து மம்தா போட்டியிடு ஜெயிக்க தயாரா? என சுவேந்து அதிகாரி விட்ட சவாலை ஏற்று மம்தா பானர்ஜி அங்கே களமிறங்கினார். 

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் பின்தங்கினார். தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி மீண்டும் அரியணையில் அமர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட மம்தா பானர்ஜி 1,200 வாக்குகளைப் வெற்றி பெற்றுள்ளார். மேற்குவங்கத்தை பொறுத்தவரை திரினாமுல் காங்கிரஸ் 214 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!