Wayanad Landslide : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 120க்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் கேரளாவில் பெய்து வரும் பருவமழை, கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் 120க்கும் அதிகமான மக்கள் காயமடைந்து, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலச்சரிவின் காரணமாக பெரிய அளவிலான பாறைகள் கீழ் நோக்கி உருண்டு வந்ததை அடுத்து, அது மீட்பு பணியையும் சிக்கலாக்கி உள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன சொந்தங்களை தேடி, மக்கள் அங்கு பரிதவித்து வரும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கும் வண்ணம் உள்ளது.
undefined
கேரளாவை மீண்டும் சோதிக்கும் இயற்கை.. அலை ரூபத்தில் வரும் ஆபத்து - ஆய்வு மையம் எச்சரிக்கை!
இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி சிரமமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. பல மாநிலங்களில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள், தொடர்ச்சியாக தங்களுடைய முழு திறனையும் அளித்து பலரை உயிரோடு மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏழு ஆண்டுகளில் தொடர்ச்சியாக கேரளாவின் பல பகுதிகளில் இதுபோன்ற பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத முதல் தேதியில் இருந்து இறுதிவரை, கேரளாவை வெள்ளமும் பெரிய அளவில் சூழ்ந்து கொண்டு மக்கள் வாட்டிவதைத்து வருகின்றது. இந்த சூழலில் நாளை ஜூலை 31ம் தேதி புதன்கிழமை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு பகுதிக்குச் சென்று மீட்பு பணிகளை நேரடியாக பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.