திருமணமான பெண் தன் பெயரை மாற்றிக்கொள்ள கணவரிடம் அனுமதி பெறணுமாம்! மத்திய அரசு விளக்கம்!!

By SG Balan  |  First Published Jul 30, 2024, 11:40 PM IST

டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


திருமணமான பெண் ஒருவர் தனது பெயரை மாற்ற விரும்பினால் கணவரிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது மத்திய அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக 40 வயது பெண் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2014ஆம் ஆண்டு எனது பெயருக்குப் பின்னால், எனது கணவரின் குடும்பப் பெயரைச் இணைத்துக்கொண்டேன். 2019ஆம் ஆண்டில் மறுபடியும் பெயரை மாற்றிக்கொண்டேன். அப்போது என் பெயர், என் கணவர் மற்றும் அவரது குடும்பப்பெயரை சேர்த்துக்கொண்டேன்" என்று தெரிவித்திருந்தார்.

Latest Videos

undefined

தொடர்ந்து, "சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் என் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரினேன். அந்த வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. இப்போது கல்வி மற்றும் பொருளாதாரத் தேவை கருதி என் பெயருடன் எனது தந்தைவழி குடும்பப்பெயரைச் சேர்க்க விரும்புகிறேன். ஆனால், மத்திய அரசின் விதிமுறையில் என் பெயரை மாற்ற எனது கணவரிடம் இருந்து தடையில்லா சான்று (என்ஓசி) பெற வேண்டும் என்று கூறப்படுகிறது" 

"விவாகரத்துக்கு முன், எனது பெயரை மாற்ற விரும்புகிறேன். இப்போது இருக்கும் மத்திய அரசின் விதிமுறைகள் பாரபட்சமானது; அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 19, 21 ஆகிய பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுகிறது" என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே இது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் டோகன் சாஹு, "ஒருவர் தனது பெயரை மாற்றுவது அவரது அடையாளத்தை மாற்றுவதாகும். எனவே பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டியது அவசியம். திருமணமான பெண் தனது குடும்பப் பெயரை மாற்ற விரும்பினால், அவரது கணவரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்" என்று கூறினார். சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

click me!