கடந்த 7 ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்

By SG Balan  |  First Published Jul 30, 2024, 7:21 PM IST

நாட்டில் அதிகரித்து வரும் நிலச்சரிவு சம்பவங்கள் குறித்தும், நிலச்சரிவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.


கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிலேயே கேரள மாநிலத்தில் தான் அதிக நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2022 வரை இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில், 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டும் பதிவாகியுள்ளன. மேற்கு அடுத்து, மேற்கு வங்கத்தில் 376 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன என புவி அறிவியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் நிலச்சரிவு சம்பவங்கள் குறித்தும், நிலச்சரிவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறதா என்பது குறித்து பாஜக எம்பிக்கள் மனோஜ் ரஜோரியா மற்றும் சுமேதானந்த் சரஸ்வதி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமான பதிலை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர, நிலப்பரப்பின் தன்மை, சாய்வு உருவாக்கும் பொருள், புவியியல், நில பயன்பாடு உள்ளிட்டவை நிலச்சரிவின் காரணங்களாக உள்ளன என்று அமைச்சர் கூறினார்.

வயநாட்டுக்கு முன் இந்தியாவை புரட்டிப் போட்ட மிக மோசமான நிலச்சரிவு துயரங்கள்!

கேரளா 2018, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பேரழிவு தரும் வெள்ளத்தைக் கண்டது. இதில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தார்கள்.

ஜூலை 26 அன்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் அளித்த பதிலின்படி, 2019-20 மற்றும் 2022 க்கு இடையில் 422 பேர் கேரளாவில் நீர்நிலை சார்ந்த வானிலை பேரழிவுகளால் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 7,102 ஆக இருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக, கேரளாவில் ஜூன் மற்றும் ஜூலை மழைப்பொழிவு குறைந்து வருவதாகவும், அதற்குப் பதிலாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத மழைப்பொழிவு அதிகரித்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

வெறித்தனமான ஐபோன் ரசிகரின் திருமண அழைப்பிதழ்! ட்ரெண்டிங்கில் கலக்கும் விசாகப்பட்டினம் ஜோடி!

click me!