- Home
- Gallery
- வயநாடு நிலச்சரிவு : திரும்பும் பக்கமெல்லாம் மரண ஓலம்.. தோண்ட தோண்ட வரும் உடல்கள் - உயரும் பலி எண்ணிக்கை!
வயநாடு நிலச்சரிவு : திரும்பும் பக்கமெல்லாம் மரண ஓலம்.. தோண்ட தோண்ட வரும் உடல்கள் - உயரும் பலி எண்ணிக்கை!
Kerala Land Slide : இன்று அதிகாலை கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமான மக்கள் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

landslide
கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், கடந்த சில நாள்களாகவே அங்கு நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கேரளாவின் வயநாடு பகுதியில், பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலரும் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென நடந்த இந்த இயற்கை சீற்றத்தில் பலர் திக்குமுக்காடிப்போயினர்.
கேரளாவை மீண்டும் சோதிக்கும் இயற்கை.. அலை ரூபத்தில் வரும் ஆபத்து - ஆய்வு மையம் எச்சரிக்கை!
kerala wayanad
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 105க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றது. 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
kerala landslide
மீட்பு படையினர் ஆறுகள் மற்றும் சேறு நிறைந்த பகுதிகளில் இருந்து தொடர்ந்து உடல்களை மீட்டு வருவதால் இறப்பு எண்ணிக்கையை துல்லியமாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து நடக்கவேண்டிய நிவாரணப் பணிகளுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொது நிதியில் இருந்து 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
wayanad landslide
மேலும் மீட்பு படையினர் முடக்காய் என்ற பகுதியில் இருந்து 150 பேரை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 483 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்