கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டைமலை உள்ளிட்ட கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் அப்படியே மண்ணுக்குள் புதைந்தது.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாட்டில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டைமலை உள்ளிட்ட கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் அப்படியே மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டது. இன்னும் நிறைய பேர் மண்ணுள் புதைந்து இருப்பதாக கூறப்படுவதால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னம் 152 பேரை காணவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
undefined
இதையும் படிங்க: Wayanad : வயநாட்டில் இருந்து புறப்பட்ட ராணுவம்.! கேரள மக்களிடம் எங்கள் இதயங்களை விட்டு செல்வதாக நெகிழ்ச்சி
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி, குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, எடக்கல் குகை பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4.ஆக பதிவாகியுள்ளது. இதனை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் மொய் விருந்து; வயநாடு மக்களுக்காக ஒன்றுகூடிய திண்டுக்கல் வாசிகள்
இந்த நிலநடுக்கத்தை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.