மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

By Dinesh TG  |  First Published Aug 8, 2024, 10:49 AM IST

west Bengal Ex- CM Buddhadeb Bhattacharya Passed away | மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.
 


மேற்கு வங்க முன்னாள் முதல்லமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலமானார். அவருக்கு வயது 80.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் ​​பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கொல்கத்தாவில் இன்று காலை 8.20 மணிக்கு காலமானார்.

1977-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள்தான் கூட்டணிதான் தொடர்ச்சியாக வென்று ஆட்சி செய்து வந்தனர். 1977-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு ஆட்சி அமைத்தார்.

நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!

ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2001-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இரு முறை முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தவர் தான் புத்ததேவ் பட்டாச்சார்யா. இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் இன்று அந்த தடம் தெரியாமல் உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஆட்சியை இழந்த இடதுசாரிகள் இன்னும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளனர். 2011ம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து வருகிறார் மம்தா பானர்ஜி. இடதுசாரி கட்சி அரசின் - மார்க்சிஸ்ட் கட்சியின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இடதுசாரி அரசியல் ஆளுமையாக திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மிகச் சிறநத கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கிய ஆளுமையாகவும் புகழ்பெற்றவர்.

Tap to resize

Latest Videos

Rajya Sabha Election : ராஜ்யசபா தேர்தலுக்கான தேதி அறிவிப்பு.! எத்தனை இடங்கள்.? எந்தெந்த மாநிலங்கள்.?
 

click me!