நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!

By SG Balan  |  First Published Aug 7, 2024, 4:52 PM IST

இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும் குஷால் குமார், மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 அல்லது 5 ஆம் தேதி தொடங்கலாம் என்று கணித்துள்ளார்.


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், உலகளாவிய அளவில் பல்வேறு பிராந்தியங்களில் மோதல் வெடித்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கினால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாலும் அதன் தாக்கம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மோதிக்கொள்ளும் இந்த நாடுகளில் மட்டுமே சண்டைகள் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது உலகப் போராக வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று பலர் கவலைப்படுகிறார்கள். இந்நிலையில், பிரபல இந்திய ஜோதிடர் குஷால் குமாரின் கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும் குஷால் குமார், மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 அல்லது 5 ஆம் தேதி தொடங்கலாம் என்று கணித்துள்ளார்.

சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர்! கல்விக்காக மிகப்பெரிய நன்கொடை இதுதான்!

இந்தியாவின் நாஸ்ட்ராடாமஸ்:

"இந்தியாவின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் குஷால் குமார், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் பற்றி கூறிய கணிப்புகள் துல்லியமாக நடந்துள்ளன. இப்போது அவர் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் தேதியை கணித்திருக்கிறார்.

முன்னதாக, மூன்றாம் உலகப் போர் ஜூன் 18, 2024 அன்று தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்டது. பிறகு தனது கணிப்பை ஜூலை 26 அல்லது 28 என்று மாற்றினார். அதுவும் நிறைவேறவில்லை.

குஷால் குமாரின் லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் உள்ள தகவலின்படி, குஷால் குமார் ஹரியானாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த வேத ஜோதிடர் ஆவார். தி மவுண்டன் ஆஸ்ட்ரோலாகர், ஹோரோஸ்கோப் போன்ற முக்கிய ஜோதிட இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பொருளாதாரம், வானிலை, வணிக உத்திகள் என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

டிசம்பர் 2017 இல், விஸ்டம் இதழில் வெளியிடப்பட்ட "2018 இல் அமெரிக்காவிற்கான ஜோதிட எச்சரிக்கைகள்" என்ற கட்டுரை பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளது.

பிணங்களுக்கு உயிர் கொடுக்கும் ஜெர்மன் நிறுவனம்! மரணத்தை வெல்ல இதுதான் ஒரே வழி!

click me!