ககன்யா திட்டத்தின் ஒரு பகுதியான ஆக்ஸியம் திட்டத்திற்கு இரண்டு ககன்யான் விண்வெளி வீரர்களை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் இன்க் நிறுவனத்துடன் விண்வெளி விமான ஒப்பந்தத்தில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, அதன் 4-வது திட்டத்திற்காக ஐ.எஸ்.எஸ் மற்றும் தேசிய பணி ஒதுக்கீட்டு வாரியம் இரண்டு ககன்யான் விண்வெளி வீரர்ககளை பரிந்துரைத்துள்ளது. தற்போது இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அடுத்த ஆக்ஸியம்-4 பயணத்தில் விண்வெளிக்கு பறக்க இரண்டு விண்வெளி வீரர்களை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்துள்ளது. குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் சர்வதேச விணவெளி நிலையத்திற்கு ஆக்ஸியம்-4 மிஷன் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மிஷனுக்கான தேர்வுகளை தேசிய பணி ஒதுக்கீடு வாரியம் செய்துள்ளது. குழு இரண்டு விண்வெளி வீரர்களை ககன்யான் பயணத்திற்காக தேர்ந்தெடுத்தது, ஒருவர் பிரதான விமானியாகவும் மற்றவர் பேக்கப் விமானியாகவும் இருப்பார்.. குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா இந்த பணிக்கான முக்கிய பைலட்டாகவும், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பேக்அப் பைலட்டாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார். ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
undefined
யார் இந்த கேப்டன் சுபான்ஷு சுக்லா?
இந்த பணிக்கான முக்கிய பைலட்டாக தேர்வு செய்யட்டுள்ள சுபான்ஷு சுக்லா அக்டோபர் 10, 1985 அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான அவர் ஜூன் 17, 2006 இல் இந்திய விமான படையில் ஃபைட்டர் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
ஃபைட்டர் காம்பாட் லீடர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக இருந்த அவர், சுமார் 2,000 மணிநேரம் பறந்த அனுபவம் கொண்டவர். விங் கமாண்டர் சுக்லா Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier மற்றும் An-32 உட்பட பல்வேறு விமானங்களை இயக்கி உள்ளார்.
யார் இந்த கேப்டன் நாயர் ?
குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், இந்த பயணத்திற்கான பேக்கப் விண்வெளி வீரர், ஆகஸ்ட் 26, 1976 அன்று கேரளாவின் திருவாழியாட்டில் பிறந்தார். நாயரும் கேப்டன் சுபான்ஷுவைப் போலவே தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். விமானப்படை அகாடமியில் அவருக்கு வாள் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
நாயர் டிசம்பர் 19, 1998 இல் ஃபைட்டர் பிரிவில் நியமிக்கப்பட்டார். கூடுதலாக, அவர் கிட்டத்தட்ட 3000 மணிநேரம் பறக்கும் அனுபவம் கொண்டவர். மேலும் ஒரு பறக்கும் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார்.
ஆக்ஸியம் ஸ்பேஸ் மிஷனின் முக்கிய அம்சங்கள்:
Axiom Mission-4 ஆனது அக்டோபர் 2024 இல் ஏவப்பட உள்ளது. Axiom Space ஆனது இந்த தனியார் விண்வெளிப் பயணத்தை இயக்குகிறது, இது இந்திய விண்வெளி வீரரை ISS க்கு கொண்டு செல்லும்.