100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவச நிலம் வழங்கும் பாபி செம்மனூர்.. இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

By Ramya s  |  First Published Aug 6, 2024, 5:11 PM IST

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்குவதாக அறிவித்துள்ளார் பாபி செம்மனூர். யார் இவர்? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?


நடிகர், தொழில்முனைவோர், சமூக ஊடக பிரபலம், பரோபகாரர் மற்றும் முதலீட்டாளர் என பன்முகங்களை கொண்டவர் பாபி செம்மனூர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும் என்று அவர் தற்போது அறிவித்துள்ளார்.

பாபி செம்மனூருக்கு வயநாட்டில் 1000 ஏக்கர் அளவில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த 1000 ஏக்கர் இடத்தில் 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட 12 முதல் 15 ஏக்கர் நிலத்தை அவர் இலவசமாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. யார் இந்த இந்த பாபி செம்மனூர், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

மரிக்காத மனிதம்! 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவச நிலம்.. வயநாடு தொழிலதிபர் நன்கொடை..

யார் இந்த பாபி செம்மனூர் ?

கேரளாவில் உள்ள திருச்சூரில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் தான் பாபி சின்னமனூர், அவர் சின்மயா வித்யாலயாவில் தனது கல்வியை முடித்தார். திருச்சூரில், கேரளாவின் விமலா கல்லூரியில், பாபி தனது உயர் கல்வியை தொடர்ந்தார். பாபி எப்போதுமே கல்வியை விட விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்து மற்றும் சாராத செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டினார்.

பிரபலமான தங்க நகை வியாபாரியாகவும் அவர் அறியப்படுகிறார். தனது தொழில்கள் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் அவர், அந்த பணத்தை மற்ற தொண்டு முயற்சிகளுக்கும் பயன்படுத்துகிறார். அதன்படி, "பாபி செம்மனூர் இன்டர்நேஷனல் குழுமத்தின்" உரிமையாளராக உள்ளார், மேலும் இந்த அடையாளத்தைப் பயன்படுத்தி பல்வேறு முயற்சிகளை நடத்துகிறார். சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக அவர் தனது சமூக நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நடத்தும் பல சிறிய அளவிலான பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகும்.

என்னோட குழந்தை; இல்ல இல்ல அது என்னோட குழந்தை - கேரளாவில் சிறுமியின் உடலுக்கா மல்லுக்கட்டிய குடும்பம்

கடந்த 2021-ம் ஆண்டு பாபி செம்மனூர் கேரள மாநில தொழில்முனைவோர் விருதைப் பெற்றார், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு அவர் செய்த சேவைகளை பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது. இவர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தங்க நகை வியாபாரம் தவிர, இவர் பிரபலமான ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். மேலும் தீம் பார்க் ஒன்றையும் இவர் நடித்தி வருவதாக கூறப்படுகிறது. பாபி செம்மனூரின் சொத்து மதிப்பு ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

click me!