பாஜக மூத்த தலைவர் LK Advani மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

By Dinesh TG  |  First Published Aug 6, 2024, 4:45 PM IST

BJP Leader LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

96 வயதாகும் அத்வானி, தலைநகர் டெல்லியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மருத்துவ கண்ணிப்பில் இருந்தார். பின்னர் உடல்நிலை சீரனதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அத்வானி அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் பிரிவில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அப்பலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவச நிலம் வழங்கும் பாபி செம்மனூர்.. இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

undefined

அத்வானி கடந்த வந்த பாதை!

இந்திய சுதந்திரத்திற்கு முன் நவம்பர் 8, 1927-ல் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த அத்வானி, அவருடைய 14 வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) சேர்ந்தார். 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவர் தனது குடும்பத்துடன் மொத்தமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.

1951-ல் உருவான பாரதிய ஜனசங்கத்தில் அத்வானி சேர்ந்தார். அவர் 1970-ல் ராஜ்யசபாவில் கால்பதித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாஜ கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975ல் இந்திராகாந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தின் போது அடல் பிஹாரி வாஜ்பாயுடன் சேர்த்து அத்வானியும் கைது செய்யப்பட்டார்.

1977ம் ஆண்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தபோது, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக அத்வானி நியமிக்கப்பட்டார். 1980ம் ஆண்டு உதயமான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நிறுவன உறுப்பினர்களில் ஒருவரானர்.

மரிக்காத மனிதம்! 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட இலவச நிலம்.. வயநாடு தொழிலதிபர் நன்கொடை..

1984ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை 1990களில் தேசிய பெரும் கட்சியாக உயர்த்திய பெருமை அத்வானிக்கு உண்டு. BJP தலைவராக 3 முறை பதவி வகித்தார். பின்னர், மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் எல் கே அத்வானி பணியாற்றினார்.

click me!