என்னோட குழந்தை; இல்ல இல்ல அது என்னோட குழந்தை - கேரளாவில் சிறுமியின் உடலுக்கா மல்லுக்கட்டிய குடும்பம்

By Velmurugan s  |  First Published Aug 5, 2024, 11:35 PM IST

கேரளா மாநிலத்தில் உயிரிழந்த குழந்தையின் உடல் சரியாக அடையாளம் தெரியாத நிலையில் இரு குடும்பத்தினர் ஒரு குழந்தையின் உடலுக்காக உரிமை கொண்டாடிய சம்பவம் கண்ணீரை வரவைத்துள்ளது.


கேரளா மாநிலத்தில் கடந்த 29ம் தேதி ஏற்பட்ட அதிகனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளில் உங்கிக் கொண்டிருந்த பலரும் குடும்பங்களுடன் மண்ணில் புதைந்தனர். மண்ணில் புதையுண்டவர்களை மீண்டும் பணி 7 நாட்களாக நடைபெற்று வருகிறது.

கேரளாவில் நிலச்சரிவை முன்கூட்டியே உணர்ந்து பல குடும்பங்களை காப்பாற்றிய வளர்ப்பு கிளிகள்

Tap to resize

Latest Videos

undefined

இன்றைய தினம் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. ஆனாலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. முழு உடலாக கிடைக்காவிட்டாலும் கை, கால், தலை என மனித உறுப்புகள் தனித்தனியாகக் கண்டறியப்பட்டு முடிந்தவரையில் அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரஸ்நவ் என்பவர் இது எனது மகள் தான் என அடையாளம் கண்டார். ஆனால் அங்கு வந்த மற்றொரு குடும்பத்தினர் இது எங்கள் குழந்தை தான், உடலை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோரிக்கை வைத்தனர். இதனால் அதிகாரிகள் குழம்பிப்போயினர்.

எங்கள் கதறல் உங்களுக்கு கேட்கவில்லையா? மீனவர்களுடன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அண்ணாமலை

இதனைத் தொடர்ந்து சிறுமியின் கையில் நெயில் பாலிஷ் இருந்ததைத் தொடர்ந்து, பிரஸ்நவ் இது என் மகள் போட்டிருந்த நெயில் பாலிஷ் தான். இது தான் எனது மகள் என்றார். ஆனால் மற்றொரு குடும்பத்தினரோ எங்கள் மகளுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பழக்கமே கிடையாது. அதனால் இது எங்கள் மகள் இல்லை என்று கூறி அங்கிருந்து கனத்த இதயத்துடன் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குழந்தையின் உடலுக்காக இரு குடும்பத்தினர் மோதிக்கொண்ட சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்கள் கண்ணீர் மல்க பார்த்துச் சென்றனர்.

click me!