வீடியோவில் குளிர்பானம் தயாரிப்பவரைப் பார்த்து 'காக்டெய்ல்' படத்தில் வரும் டாம் குரூஸ் ஞாபகம் வருவதாகவும் ஆனந்த் மகேந்திரா கூறியிருக்கிறார்.
இப்போதெல்லாம், குளிர்பானம் அல்லது உணவு பிரியர்கள் எப்படி தாயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இத்தகைய வீடியோக்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
குறிப்பாக சில திறமையான கடைக்காரர்கள் குளிர்பானங்களைத் தயாரிப்பதைப் பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருக்கும். ஹிப்னாடிஸம் போல கைகளை அசைத்து வேகமாக செயல்படுவது ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில், ஆனந்த் மஹிந்திரா ஒரு வீடியோவைப் பார்த்து வியந்திருக்கிறார்.
சிறு குறு நிறுவனங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
ஒரு தெருவோரக் கடையில் இரண்டு இளம் விற்பனையாளர்கள் குளிர்பானம் தயாரிக்கும் வீடியோவை பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அவரது திறமையை ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பலர் பாராட்டி இருக்கின்றனர்.
No this gentleman wasn’t the bartender at a New Year’s Eve party—but he certainly could and should have been! Talent comes in all forms. 👏🏽👏🏽👏🏽Move over Tom Cruise… (remember Cruise in the film Cocktail? ) pic.twitter.com/CRPBzliu4g
— anand mahindra (@anandmahindra)இந்த வீடியோவைப் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "இவர் புத்தாண்டு பார்ட்டியில் மதுபானக் கலவை தயாரிப்பவர் அல்ல, ஆனால் இவரால் அதை நிச்சயமாகச் செய்ய முடியும்! திறமை எல்லா வடிவங்களிலும் வெளிப்படும்" என்று பாராட்டி இருக்கிறார்.
மேலும், இந்த வீடியோவில் குளிர்பானம் தயாரிப்பவரைப் பார்த்து 'காக்டெய்ல்' படத்தில் வரும் டாம் குரூஸ் ஞாபகம் வருவதாகவும் ஆனந்த் மகேந்திரா கூறியிருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவை 4.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலதரப்பட்ட கருத்துகளையும் கூறிவருகின்றனர்.
டோக்கியோ விமான விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 379 பயணிகள்! மற்றொரு விமானத்தில் சிக்கிய 5 பேர் பலி!