கொல்கத்தாவில் பத்து வயது சிறுமிக்கு சீன நிமோனியா பாதிப்பு!

By Manikanda Prabu  |  First Published Jan 3, 2024, 3:29 PM IST

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பத்து வயது சிறுமி சீன நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் (Institute of Child Health) 10 வயது சிறுமிக்கு அரிய வகை நோயான, 'சீன நிமோனியா' - மைக்கோபிளாஸ்மா நிமோனியா - பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள பான்ஸ்ட்ரோனியில் வசிக்கும் அச்சிறுமி, லேசான சுவாசக் கோளாறு, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளுடன் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பார்க் சர்க்கஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மைக்கோபிளாஸ்மா நிமோனியாவே அவரது நோய்க்கான காரணம் என கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மைக்கோபிளாஸ்மா நிமோனியாவால் ஏற்பட்ட சுவாச நோயின் பாதிப்பு நாடு முழுவதும் பரவலாக இருந்ததால், இது 'சீன நிமோனியா' என்று குறிப்பிடப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் ஏழு பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

Latest Videos

undefined

கொல்கத்தா மருத்துவமனையில் பாதிப்புக்குள்ளான சிறுமி சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தவிர, இந்த நிமோனியா பாதிப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிமோனியா பாதிக்கப்பட்டு சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. நுரையீரல் பாதிக்கப்பட்ட முதியவர்கள் இதனால் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.

பாஜகவின் கையாளாக ED... நிர்மலா சீதாராமனுக்கு தகுதியே இல்ல.. அவர முதல்ல நீக்குங்க - ஐஆர்எஸ் அதிகாரி விளாசல்

மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்பது பாக்டீரியாக்கள் ஆகும், அவை முதன்மையாக சுவாச பாதையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், இது இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்ற பிற உறுப்புகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த தொற்றானது ஆன்டிபயாட்டிக் கொடுத்தால் குணமாகும் என்பதால் பீதியடைய தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். “மருந்துகளால் சிறுமி நன்றாக குணமடைந்து வருகிறார்.” என ஐ.சி.ஹெச். குழந்தை மருத்துவத் தலைவர் பேராசிரியர் ஜெய்தேப் ரே கூறியுள்ளார்.

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ பேராசிரியர் மிஹிர் சர்க்கர் கூறுகையில், “மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்பது மாறுபட்ட நிமோனியா ஆகும். இது தற்போது வளர்ந்த நாடுகளில் அனைத்து நிமோனியா பாதிப்பிலும் 5 - 10 சதவீதம் இது உள்ளது.” என்றார்.

உண்மை வென்றது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற கவுதம் அதானி!

“இது பெரும்பாலும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், வளக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பாக்டீரியாவை நாம் பெரும்பாலும் கட்டுப்படுத்துவதில்லை. மற்ற சுவாச நோய்க்கிருமிகளைப் போலவே துளிகளாகவே பரவுகிறது. எனவே, மாஸ்க் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதாரம் நடவடிக்கைகள் மூலம் பரவுவதை தடுக்கலாம்.” என்றும் மிஹிர் சர்க்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் விஷயத்தில், அவரது கண் மற்றும் நுரையீரலில் நிமோனியாவின் அறிகுறிகளை மார்பு எக்ஸ்-ரே மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆய்வக சோதனைகள், மைக்கோபிளாஸ்மா நிமோனியாவை உறுதிப்படுத்தியுள்ளன. “இருமல், தும்மல் உள்ளிட்டவைகள் இந்த தொற்றானது பரவும் என்பதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுவாச தொற்று போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.” என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

click me!