பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்.. 14 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.. 27 பேர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Jan 3, 2024, 12:04 PM IST
Highlights

அசாம் மாநிலம் கோல்காட் மாவட்டம் பாலிஜானில் இருந்து 45 பேருடன் சுற்றுலா பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதிகாலை 5 மணிக்கு எதிரே நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

சுற்றுலா பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அசாம் மாநிலம் கோல்காட் மாவட்டம் பாலிஜானில் இருந்து 45 பேருடன் சுற்றுலா பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதிகாலை 5 மணிக்கு எதிரே நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

Latest Videos

இதையும் படிங்க;- இந்தியாவில் 312 பேருக்கு JN.1 வகை கொரோனா தொற்று உறுதி.. இந்த மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு..

இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சீறும் சீமான்.!

click me!