லட்சத்தீவில் இன்று ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..

By Ramya s  |  First Published Jan 3, 2024, 9:51 AM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று லட்சத்தீவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி இன்று லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்ளார். அதில் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில், நீர்மூழ்கிக் கப்பல் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் பேட்டரி ஆதரவு கொண்ட சூரிய சக்தி திட்டம் ஆகியவை அடங்கும்.

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் திட்டங்களில் கொச்சி மற்றும் லட்சத்தீவு தீவுகளுக்கு இடையிலான நீர்மூழ்கிக் கப்பல் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பும் உள்ளது, இது தொலைதூர தீவுகளில், மெதுவான இணைய வேகத்துடன் போராடும் மக்களுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், தீவுகளில் இணைய வேகத்தை 100 மடங்கு உயர்த்தும், குறிப்பாக வினாடிக்கு 1.7 கிகாபிட்களில் இருந்து 200 ஜிகாபிட்கள் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது., 2020 இல் பிரதமர் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்த இந்தத் திட்டம், லட்சத்தீவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பைப் பெரிதும் மேம்படுத்தி, வேகமாகவும் செயல்படுத்தவும் உதவும். நம்பகமான இணைய சேவைகள், டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ், கல்வி முயற்சிகள், டிஜிட்டல் வங்கி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு போன்றவை பெற உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Videos

undefined

வோட் ஆன் அக்கவுண்ட் என்றால் என்ன? மோடி அரசு பொதுத் தேர்தலைச் சந்திக்க கை கொடுக்குமா?

அதே போல் இன்று அகட்டி மற்றும் மினிகாய் தீவுகளின் அனைத்து வீடுகளிலும் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் தீவுகளின் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும். டீசல் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் தீவின் சார்புநிலையை குறைக்க உதவும் முதல் பேட்டரி ஆதரவு கொண்ட சூரிய சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணிக்கிறார். இந்திய ரிசர்வ் பட்டாலியனின் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் கவரத்தியில் உள்ள 80 பேர் கொண்ட முகாம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைக்கிறார். கல்பேனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்கவும், ஆந்த்ரோத், செட்லாட், கடமாட், அகத்தி மற்றும் மினிகாய் ஆகிய தீவுகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டவும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு, திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று திருச்சி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து நேற்று மாலை லட்சத்தீவு சென்ற பிரதமர், அகத்தி விமான நிலையத்தை வந்தடைந்த உடனேயே பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். மோடி தனது உரையின் போது, லட்சத்தீவு வழங்கும் மகத்தான சாத்தியக்கூறுகளை குறிப்பிட்டார், சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக லட்சத்தீவு புறக்கணிப்பை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் லட்சத்தீவில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தீவுகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

UPI பரிவர்த்தனைகள்.. இன்று முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள் & மாற்றங்கள் - முழு தகவலும் இங்கே!

தொடர்ந்து லட்சத்தீவுகளின் முன்னேற்றம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார். X வலைதளத்தில் பதிவிட்ட அவர் “லட்சத்தீவு மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மக்களுக்கு செழிப்புக்கான வழிகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். 

click me!