கண்ணூரில் தன் பள்ளி ஆசிரியரிடம் ஆசி பெற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

By SG BalanFirst Published May 22, 2023, 7:36 PM IST
Highlights

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் கண்ணூர் சென்றபோது தனது பள்ளி ஆசிரியரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தன்கர் ஆகியோர் திங்கட்கிழமை கண்ணூர் அருகில் உள்ள பானூருக்குச் சென்றனர். அங்கு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது ஆசிரியரான ரத்னா டீச்சரை அவரது வீட்டிற்குப் போய் நலம் விசாரித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, துணை குடியரசுத் தலைவராக இருக்கும் தன் மாணவரைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரத்னா டீச்சர், "இதைவிட பெரிய குரு தட்சிணை யாரும் கொடுக்க முடியாது" என நெகிழ்ச்சியுடன் கூறினார். சைனிக் பள்ளியில் வெகுகாலமாக ஆசிரியராகப் பணியாற்றிய ரத்னா நாயர், ஓய்வுக்குப் பின் பானூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வாழ்கிறார்.

பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?

சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் கடந்த காலத்திலிருந்து பல விஷயங்களைப் பேசினார்கள். வகுப்பறையில் காக்கி உடை அணிந்து முன் பெஞ்சில் ஒழுக்கமாக அமர்ந்திருக்கும் பையனாக ஜக்தீப் தன்கர் இருந்தார் என ரத்னா நாயர் நினைவுகூர்ந்தார். "பள்ளிப் பருவத்தில் ஜக்தீப் தன்கர் எல்லாவற்றிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்; ஒழுக்கமான, கீழ்ப்படிதலுள்ள மாணவராக இருந்தார்; அனைத்து பாடங்களிலும், கல்வி சாராத செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கினார்" என அவர் கூறினார்

ஜக்தீப் தன்கர் படித்தது உறைவிடப் பள்ளி ஆகும். அங்கு மாணவர்கள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் ஆசிரியர்களுடன் செலவிடுகிறார்கள். பெற்றோர்கள் அடிக்கடி பள்ளிக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துச் செல்வார்கள். "ஜக்தீப்பின் தந்தை ஒவ்வொரு மாதமும் தனது குழந்தைகளைப் பார்க்க வருவது எனக்கு நினைவிருக்கிறது" என்று ரத்னா டீச்சர் கூறினார்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்குத் தீ வைப்பு... மே 26 வரை இன்டர்நெட் சேவை முடக்கம்

உரையாடலின்போது, ரத்னா டீச்சரும் அவரது குடும்பத்தினரும் துணை குடியரசுத் தலைவருக்கு இளநீர் இட்லியும்  வழங்கி உபசரித்தனர். டீச்சர் வீட்டில் செய்த வாழைப்பழ சிப்ஸை துணை குடியரசுத் தலைவர் ருசித்துச் சாப்பிட்டார்.

ரத்னா நாயர் ராஜஸ்தானில் உள்ள சித்தோர்க்ரா சைனிக் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது ஜக்தீப் தன்கருக்கு பாடம் கற்பித்தார். ரத்னா நாயர் ராஜஸ்தானில் உள்ள ராணுவப் பள்ளியில் 18 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர். பின்னர் கண்ணூர் நவோதயா பள்ளியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார். துணை குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கேரள போலீசார் கண்ணூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜக்தீப் தன்கர் மட்டுமின்றி அவரது சகோதரருக்கும் ரத்னா டீச்சர் ஆசிரியராக இருந்திருக்கிறார். 1968ஆம் ஆண்டு ஜக்தீப்  தன்கர் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளியில் இருந்து விடைபெற்றார். ஆனாலும் அவருக்கு தன் விருப்பமான ஆசிரியருடன் நெருக்கம் குறையவில்லை. மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றதும் அவரிடம் ஆசி பெற்றார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற விழாவிற்கும் ரத்னா நாயர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

Mount Etna Eruption: இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா! எரிமலை வெடிப்பால் விமானங்கள் ரத்து

click me!